Newskadai.com
தமிழ்நாடு

இந்த 5 மாவட்ட மக்களே உஷாரா இருங்க… விட்டாச்சு எச்சரிக்கை!

Rain
Share this:

இன்று விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி. கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட கடலோர மாவட்டங்கள், ஏனைய டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், சனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

 

நாளை (நவ.30) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டிச.1ம் தேதி அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னறுடன் கூடிய மிதமான மழையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டிச.2 அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஓட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 


Share this:

Related posts

தமிழகத்தில் விரட்டி விரட்டி வெளுக்கும் கொரோனா… கோவை, நாகை, மதுரை, சேலம்..!?

NEWSKADAI

நீட் தேர்வு அச்சம்: கோவையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை… முடிவின்றி தொடரும் சோகம்…!!

MANIMARAN M

செப்.17ல் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு… அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு…!!

MANIMARAN M

காவிரியில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு…!!

THAVAMANI NATARAJAN

விநாயகர் சதுர்த்தி வழக்கு: தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது… மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் விடுத்த அதிரடி எச்சரிக்கை…!!

MANIMARAN M

மோடி திட்டத்தில் கேடித்தனம்… நானும் ”விவசாயிதான்” என்று கோடிகணக்கில் கொள்ளை…

THAVAMANI NATARAJAN