மிகச் சிறப்பாக கல்வி பணியாற்றும் பள்ளி ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தை ஒட்டி தமிழக அரசு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
இவ்வாண்டு (2020) டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுக்கு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒன்றியத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெள்ளகோயில் ராமசாமி நகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை ப.புவனேஸ்வரி மற்றும் முத்தூர் சர்க்கரை பாளையம் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை ந.மல்லிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாழ்த்துக்கள் டீச்சர்.