Newskadai.com
தமிழ்நாடு

நாகையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 3 பெண்கள் படுகாயம்…!!

Share this:

நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கல் கிராமத்தில் மின்சாரம் தாக்கி மூன்று பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சிக்கல் கிராமம் கீழ வீதியில் வீடுகள் நிறைந்த பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. அறுந்து விழுந்த மின்கம்பி கீழ வீதியில் உள்ள பழைய ஊராட்சி மன்ற கட்டிட சுவரின் மீதும் அருகில் உள்ள அரசமரக்கிளைகள் வழியாக வீடுகள் உள்ள பகுதியில் விழுந்து கிடந்துள்ளது. மின்கம்பி அறுந்து கீழே விழுந்து கிடப்பது தெரியாமல் தனது வீட்டில் இருந்து சாந்தி(வயது40) என்பவர் வெளியில் வந்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின்கம்பியில் கைப்பட்டு சாந்தி கீழே விழுந்து அலறியுள்ளார். சாந்தியின் அலறல் கேட்டு அருகில் வசித்து வந்த வசந்தா மற்றும் விஜயலட்சுமி ஓடி வந்து பார்த்தனர். சாந்தியை மின்சாரம் தாக்கியுள்ளது தெரியாமல் கீழே விழுந்த அவரை தூக்க முயன்றுள்ளனர். உதவி செய்ய வந்த இருவரும் மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். சம்பவம் அறிந்த பொதுமக்கள் பாதுகாப்பாக மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்த நாகை மின்வாரிய செயற்பொறியாளர் பாலாஜி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தி அறுந்து விழுந்த மின்கம்பியை உடனே சரி செய்ய மின்சார வாரிய பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.


Share this:

Related posts

ஒரே ஆண்டில் 2வது முறை… அடித்து தூக்கிய மேட்டூர் அணை…!!

THAVAMANI NATARAJAN

காதல் திருமணம்: மருமகனை ஆள் வைத்து அடித்துக்கொன்ற மாமனார் கைது…!!

THAVAMANI NATARAJAN

தாலி சங்கலிக்காக கணவரை போட்டுத்தள்ளிய மனைவி… ஹாஸ்பிட்டலில் அவிழ்த்துவிட்ட புளூகு மூட்டைகள்…!

THAVAMANI NATARAJAN

சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி… ஆட்சியர் சீதாலட்சுமிக்கு உறுதியானது கொரோனா தொற்று….!!

NEWSKADAI

#BREAKING | இ-பாஸ் தேவையில்லை… இன்று முதல் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…!

AMARA

பிரதமரிடம் மனு போட்ட முதல்வர்.. நாம எப்பவுமே நிறைய தான் கேட்போம்… ஆனா அவங்க கொடுக்கனும்ல…

MANIMARAN M