Newskadai.com
தமிழ்நாடு

சேலத்தில் கொரோனாவால் 2 மகன்கள் பலி… சோகத்தில் உயிரிழந்த தாய்… ஒரே வீட்டில் 3 மரணம்…!

Death
Share this:

தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது, சேலம் மாநகராட்சி பகுதியில் தினமும் 200 பேர் வீதம் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைகிறார்கள், குறிப்பாக சேலம் குகை, செவ்வாபேட்டை மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் அதிகமாக பரவி வருகிறது, இதனால் சேலம் மாநகராட்சி நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

salem

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சேலம் செவ்வாய்பேட்டையில் அமைந்துள்ள தாண்டவன் தெருவில் வசித்து வந்த அண்ணன் தம்பிகள் கொரோனா பாதிப்பால் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் இரண்டு மகன்களையும் பறிகொடுத்த அவர்களுடைய அம்மா சாப்பிடாமல் இருந்துள்ளார். இதனால் அவருடைய உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், 70 வயது மூதாட்டியான அவரும் உயிரிழந்தார். மகன்களிடம் இருந்து அவருக்கும் கொரோனா தொற்று பரவி இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.  இதனால் அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்து நேற்று அடைக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்


Share this:

Related posts

பாஜகவில் சேர வந்த ரவுடி… போலீசுக்கு பயந்து தப்பியோட்டம்…

MANIMARAN M

கேரள தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்… கோவை நகைப்பட்டறை உரிமையாளரை வளைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்…!!

MANIMARAN M

தூக்கத்தில் நடந்த சோகம்… தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி…!!

THAVAMANI NATARAJAN

#கொரோனா : கோவையில் குறையாத பலி… மற்ற மாவட்ட நிலையை தெரிந்துகொள்வோம்..!!

NEWSKADAI

தொடருமா அதிமுக – பாஜக கூட்டணி ?… கமலாலயத்தில் இன்று நடக்கிறது செயற்குழு கூட்டம்…!!

MANIMARAN M

ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்கும் “Swiggy”… கொதித்தெழும் சீமான்..

MANIMARAN M