Newskadai.com
தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் குடும்பத்தையே காலி செய்த கொரோனா… கலங்கி நிற்கும் ஊர்மக்கள்…

Share this:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சந்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராதா செட்டியார் (88), மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சீதாலட்சுமி (80) மற்றும் இவர்களது மகன் ராமு (58) ஆகிய மூன்று பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ராமுவும் சந்தூர் கிராமத்தில் மளிகை கடை நடத்தி வந்தவர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் கொரோனாவால் உயிரிழந்தது, அந்த கிராமத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மூவரின் உடலும் கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் அடக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 


Share this:

Related posts

பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு… அதிகாரிகள் அதிரடி விசாரணை…

MANIMARAN M

சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி… ஆட்சியர் சீதாலட்சுமிக்கு உறுதியானது கொரோனா தொற்று….!!

NEWSKADAI

நீட் தேர்வில் தமிழகத்திலேயே அதிக மதிப்பெண் பெற்ற சென்னை மாணவி… வெற்றிக்கான காரணம் என்ன தெரியுமா?

AMARA

விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள் : வெளிச்சத்திற்கு வந்த 110 கோடி ரூபாய் முறைகேடுகள்…

MANIMARAN M

100க்கு மேல் கொரோனா பாதிப்பில் 11 மாவட்டங்கள்… உங்கள் ஊரில் எவ்வளவு..!?

NEWSKADAI

பவானி ஆற்றில் வெள்ளபெருக்கு… பவானிஸ்வரர் கோவிலுக்கு அபாய எச்சரிக்கை..!!

THAVAMANI NATARAJAN