Newskadai.com
இந்தியா

கோயிலுக்குள் நள்ளிரவில் நடந்த பயங்கரம்… 3 காவலாளிகளை கொடூரமாக கொன்ற கொள்ளை கும்பல்…!!

Share this:

கர்நாடகா மாநிலம் மாண்டியா குட்டலுவில் உள்ள ஆரகேஸ்வர சுவாமி கோயில் வளாகத்துக்குள் மூவரின் சடலங்கள் காணப்பட்டுள்ளது. இதைக் கண்ட பொது மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் மூன்று சடலங்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். அந்த சடலங்கள் ஆனந்த் (42), கணேஷ் (55) மற்றும் பிரகாஷ் (60) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

இதில் ஆனந்த் கோயில் அர்ச்சகரின் மகன் என்றும், கணேஷ், பிரகாஷ் அந்த கோவிலில் பாதுகாப்புக் காவலர்களாகப் பணியாற்றி வந்தவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களின் தலைகள் நசுக்கபட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர் என்று மாண்டியா போலீஸ் சூப்பிரண்டு கே பரசுராமர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை கைது செய்ய ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாண்டியா கிழக்கு காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், குற்றம் நடந்த இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களுடன், இந்த சம்பவத்தை நாங்கள் கொலை என்று உறுதிப்படுத்த முடியும். அங்குள்ள உண்டியல் உடைக்கப்பட்டு ரூபாய் தாள்கள் முழுவதும் கொள்ளையடிக்கபட்டு, நாணயங்களை மட்டும் விட்டு சென்றிருப்பதால் இந்த கொலைக்கான பின்னணி கொள்ளை  என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவமறிந்து மாண்டியா மக்களவை எம்.பி. சுமலதா மற்றும் காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டனர். அங்கு கூடியிருந்த பொது மக்கள் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட மூவரின் குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்


Share this:

Related posts

ரயில்வேயில் தனியார் : 50 சதவீதம் நிரந்தர காலி பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க ரயில்வே வாரியம் உத்தரவு.

NEWSKADAI

உ.பி யில் பிரம்மாண்டமான சினிமா நகரம் : முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு..!!

MANIMARAN M

வாகன ஓட்டிகளே உஷார்: பெட்ரோல் பங்குகளில் இப்படியும் நூதன முறையில் மோசடி…!!

MANIMARAN M

கொரோனா நேரத்தில் இப்படியா?… காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்…!!

MANIMARAN M

பெங்களூர் கலவரம்: இந்து கோயிலை சுற்றி இஸ்லாமியர்கள் அமைத்த பாதுகாப்பு அரண்… நெகிழ்ச்சி வீடியோ…!!

AMARA

மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இடம்பெற்றது Paytm…

MANIMARAN M