Newskadai.com
சினிமா

3 ரசிகர்களின் உயிரை காவு வாங்கிய பிரபல நடிகரின் பேனர்… பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம்…!

Share this:

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். டோலிவுட் ரசிகர்கள் செல்லமாக பவர் ஸ்டார் என அழைக்கும் பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம் கடந்த ஒருவாரமாக சோசியல் மீடியாக்களை கலக்கி வருகிறது. அவருக்கு இன்று அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என பல தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

பவன் கல்யாண் பிறந்தநாளை ரசிகர்கள் தடபுடலாக கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆந்திராவையே அதிரவைக்கும் விதமாக ஒரு சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் சாந்திபுரம் பகுதியில் பவன் கல்யாண் ரசிகர்கள் 6 பேர் பேனர் நேற்று இரவு 8.30 மணி அளவில் பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

இரும்பு சட்டத்தில் ஒட்டப்பட்டிருந்த பேனரை சாலையோரம் வைக்க முயன்ற போது அங்குள்ள மின்கம்பியில் உரசி மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் 30 வயதான சோமசுந்தரம், 32 வயதான ராஜேந்திரா, 28 வயதான அருணாச்சலம் ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மீதமுள்ள 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பவன் கல்யாணம் ரசிகர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பலியான மூவரின் குடும்பத்திற்கு தனது இரங்கலை பதிவு செய்துள்ள பவன் கல்யாண், அவர்களுடைய குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பது எனது கடமை என தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த 3 இளைஞர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஜன சேனா கட்சி அறிவித்துள்ளது.

இதேபோல் பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் பிங்க் படத்தில் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரும் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.


Share this:

Related posts

“மீண்டு வா… இசை உலகை ஆள வா”…. எஸ்.பி.பி. உடல்நலம் பெற வேண்டி வைரமுத்து உருக்கம்…!

NEWSKADAI

அந்த தயாரிப்பாளருக்கு கொரோனா தொற்று இல்லையாம்… தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி…!

AMARA

எஸ்.பி.பி-யின் தற்போதைய உடல் நிலை என்ன?… மகன் எஸ்.பி.பி. சரண் வெளியிட்ட வீடியோ…!

AMARA

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் படங்களை திரையிட மாட்டோம்… திடீரென போர்க்கொடி தூக்கிய திரையரங்கு உரிமையாளர்கள்…!!

NEWSKADAI

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடம்… செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை…!!

AMARA

விரைவில் தியேட்டர்கள் திறப்பு?… அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன நல்ல செய்தி…!!

MANIMARAN M