Newskadai.com
அரசியல்

பாஜகவுடன் சகவாசம்… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் கட்சிலிருந்து நிரந்தரமாக நீக்கம்… ஸ்டாலின் அதிரடி…!!

Share this:

ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து சர்ச்சையை உருவாக்கியது. சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த ஜெ.அன்பழகன் கொரோனாவால் உயிரிழக்க அந்த பதவி தனக்கு தான் கிடைக்கும் என கனவு கண்டார் கு.க.செல்வம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இடையில் புகுந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினால், அவருக்கு நெருக்கமான சிற்றரசு அந்த பதவியில் அமரவைக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதே சமயத்தில் டெல்லி சென்ற கு.க.செல்வம் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்தார். தனது தொகுதி பிரச்சனைக்காக ஜே.பி.நட்டாவை சந்தித்ததாக கு.க.செல்வம் தெரிவித்த நிலையில், அவரை திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதனையடுத்து ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவின் போது, கமலாலயம் சென்ற கு.க.செல்வம் அங்கு நடந்த பூஜையிலும் கலந்து கொண்டார். இதனால் அவர் பாஜகவில் இணைந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் எம்.எல்.ஏ.கு.க.செல்வத்தை நிரந்தரமாக கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் திமுக கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாத காரணத்தால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார்”. என அறிவித்துள்ளார்.


Share this:

Related posts

ரெடியா..? இன்று முதல் ரூ.2,000 பெறலாம் – மேலும் 13 பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது

AFRIN

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்… மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

AMARA

இருவரின் கைப்பாவையாக மாறிய கமல்… மநீம-வில் இருந்து விலகிய முருகானந்தம் பகீர் குற்றச்சாட்டு…!

AMARA

ஆன்லைனில் வகுப்பில் பாலியல் தொல்லை… பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு…!

NEWSKADAI

கூட்டணி கட்சியிலேயே கைவைத்த அதிமுக… பாஜக தலைவர் எல்.முருகன் மீது பாய்ந்தது வழக்கு…!!

MANIMARAN M

சீமானையும், ஹரி நாடாரையும் சும்மா விடாதீங்க… தற்கொலை முயற்சிக்கு முன் விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI