மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதாகக் கூறி பல போலி நிறுவனங்களை உருவாக்கி சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக உறுதியான தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லியில் பல இடங்களில் இதில் தொடர்புடைய சீனர்களின் வீடுகளிலும் அவர்களுக்கு உதவிய இந்தியர்களின் வீடுகளிலும் சோதனை செய்தோம். போலியான பெயரில் இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்த சீனாவைச் சேர்ந்த நபரை கைது செய்துள்ளோம்.
இவர்களுக்கு போலியான இந்திய பெயர்களில் 40க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் உள்ளன. இதன் மூலம் ₹1000 கோடிக்கு அதிகமான அளவு பணம் சட்டத்திற்கு புறம்பான வகையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத பணப் பரிமாற்றத்துக்கு வங்கி ஊழியர்கள், ஆடிட்டர்கள் உடந்தையாக இருந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஹவாலா மோசடி உறுதியாகி இருப்பதால் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு இந்த வழக்கு மாற்றப்படும். பல்வேறு இடங்களில் சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது