Newskadai.com
தமிழ்நாடு

நாகை மக்களுக்கு ரூ.1000 கோடியை அள்ளிக்கொடுத்த முதல்வர்… அசத்தலான திட்டங்கள்…

Share this:

பல்வேறு மாவட்டங்களில் சுற்று பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆய்வை மேற்கொண்டார். நேற்று மாலை நாகப்பட்டினம் வந்தடைந்த முதல்வர் அங்கு மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளையும், கொரோனா நோய்த் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வில் ஈடுபட்டார்.

 

மேலும் நாகை மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நாகை மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் ரூ.43.60 கோடி மதிப்பிலான 13 முடிவடைந்த திட்டப் பணிகளை துவக்கி வைத்து, ரூ.207.56 கோடி மதிப்பிலான 10 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நாகை மாவட்டத்தில் விரைவில் உணவு பூங்கா மற்றும் ரெடிமேட் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். உணவு பூங்கா ரூ.1000 கோடி மதிப்பில் 250 ஏக்கரில் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.


Share this:

Related posts

நாகை தொழிலாளியின் அசத்தல் கண்டுபிடிப்பு… ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி…!!

MANIMARAN M

இரண்டரை வயது பெண் குழந்தை கடத்தல்… 10 நாள் போராட்டத்திற்கு பிறகு வெளியானது அதிர்ச்சி பின்னணி…!!

NEWSKADAI

கட்டாய கட்டண வசூல் : 18 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்…

MANIMARAN M

சேலத்திலும் மோடி திட்டத்தில் மோசடி : அதிகரிக்கும் பல கோடி ரூபாய் முறைகேடுகள்…

MANIMARAN M

அய்யா… குளத்த காணோம்யா…குளத்த காணோம்… கண்டுபிடிச்சிக் குடுங்கய்யா…

MANIMARAN M

4 மணி நேரத்திற்கும் மேலாக திணற திணற விசாரணை… எஸ்.வி.சேகரை வச்சி செய்யும் காவல்துறை…!!

NEWSKADAI