Newskadai.com
அரசியல்

சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகும் தேதி இதுதான்… வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்…!!

Sasikala
Share this:

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அவருடைய நெருங்கிய தோழியான சசிகலா, இளவரசன், சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாயும், மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் மறைந்ததை அடுத்து மற்ற மூவர் மட்டுமே சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

Sasikala

சசிகலாவின் சிறை தண்டனை 2021 பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் அவர் அதற்கு முன்னதாகவே சிறையில் இருந்து விடுதலை ஆக உள்ளதாக பல்வேறு தகவல்கள் பரவின. இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அதிகாரப்பூர்வ பதில் கிடைத்துள்ளது.

Sasikala

 

இதையும் படிங்க: http://அடுத்த அதிர்ச்சி… கொரோனாவால் பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் திரையுலகம்…!!

அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவார் என பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒருவேளை அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 10 கோடி ரூபாய் அபராத தொகையை கட்டவில்லை என்றால் மேலும் ஓராண்டிற்கு தண்டனை காலம் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

“தமிழகம் முழுவதும் 500 துணை மின் நிலையங்கள்”… பேரவையில் அமைச்சர் தங்கமணி தகவல்…!!

MANIMARAN M

வேதா நிலையம் #81 போயஸ் கார்டன்….

NEWSKADAI

திமுக துணைப் பொதுச்செயலாளராக பொன்முடி, ஆ.ராசா நியமனம்…. 3ல் இருந்து 5 ஆக உயர்வு…!!

AMARA

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி…!!

NEWSKADAI

இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து… தமிழக அரசுக்கு அபாய எச்சரிக்கை விடுத்த சீமான்…!

MANIMARAN M

“சாதி அரசியல் செய்பவரோடு கூட்டணி இல்லை”… இறங்கி வந்த ராமதாஸ்… எகிறி அடிக்கும் திருமா…!!

MANIMARAN M