பாலியல் வழக்கிற்கு அஞ்சி கைலாசாவில் பதுக்கியிருக்கும் நித்தியானந்தா தினமும் ஒரு வீடியோக்களை வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறார். . நித்தி எப்போது கைலாசா என்ற நாட்டின் அமைத்து வருவதாக சொன்னாரோ அப்போதிலிருந்தே அந்த நாட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசாவிற்கான பொற்காசுகளை வெளியிட்ட நித்தியானந்தா, அத்தனையும் சுத்த தங்கம் என அதிர்ச்சி கொடுத்தார்.
கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான பொற்காசுகளை அறிமுகப்படுத்தினார். அந்த காசுகளைக் கொண்டு உலகம் முழுவதும் உள்ள 56 இந்து நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு நேரலையில் பேசிய நித்தியானந்தா, கைலாசா நாட்டு பொருளாதார, வணிக செயல்பாடுகளில் பங்கேற்க மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் தனது உடலில் ஓடும் ரத்தமும், உயிரில் கலந்த வீரமும் இந்த 3 ஊர் மக்களும் கொடுத்த பிச்சை என உணர்ச்சி பொங்க பேசிய நித்தியானந்தா, திருவண்ணாமலை அடிவாரப்பகுதிகளில் பல சிசிடிவி கேமராக்களை வைத்து அருள் பாலித்து வருவதாகவும், சிசிடிவி சிக்னலை வைத்து கைலாசா நாட்டை எங்கு உள்ளது என யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றும் சிரித்தபடி கூறியுள்ளார்.