Newskadai.com
தமிழ்நாடு

திருவண்ணாமலை தீப திருவிழா…. பக்தர்கள் அனுமதி குறித்து ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!

Tiruvannamalai
Share this:

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருகோவிலில் ஆண்டு தோறும் தீப திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது, அதே இந்த ஆண்டும் தீப திருவிழா மற்றும் தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் துனை தலைவர் சக்திவேல் சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தீப திருவிழா மற்றும் தேர் திருவிழா நடத்துவது குறித்து அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறு கடந்த வாரம் உத்தரவிடப்பட்டது.

Tiruvannamalai

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நிர்வாகத்தின் தரப்பில் வரும் 29 ம் தேதி நடக்க இருக்கும் தீப திருவிழா மற்றும் தேர் திருவிழா அன்றும் அதற்கு முந்தைய நாளும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா பரவல் காரணமாக தேர் திருவிழாவை கோவில் வளாகத்திற்குள் நடத்த முடிவுடுத்திருப்பதாகவும், மற்ற நாட்களில் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டு மணி நேரத்திற்கு 800 பக்தர்கள் வீதம் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவார்கள் எனவும்  தெரிவிக்கப்பட்டது.

Tiruvannamalai

அதன் பின் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் தேர் திருவிழாவினை கோவிலுக்குள் நடத்தாமல் கோவிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதியில் வலம் வருவது தான் சிறப்பு எனவே இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கேட்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீரிபதிகள் இந்த விசயத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் முடிவெடுக்க வேண்டியது என்பதால் இதில் ஐகோர்டடு தலையிடாது என கூறி நீதிபதிகள் வழக்கை முடித்தனர்.

இதையும் படிக்க ;http://கொத்து கொத்தாய் இறந்த குரங்குகள்… மலை மேல் நடந்த விபரீதம்..!


Share this:

Related posts

கோவிலுக்குள் கொன்று புதைப்பட்ட இளைஞர் சடலம்… கள்ளக் காதலால் அர்ச்சகர் செய்த கொடூரம்…!!

MANIMARAN M

8 வயது சிறுவனை காவு வாங்கிய ‘குப்பை’… ஈரோட்டில் நடந்த பரிதாபம்..!!

THAVAMANI NATARAJAN

மகளை காட்டி ரூ.1 கோடி வரை மோசடி… தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு…!

THAVAMANI NATARAJAN

நீட் தேர்வால் தருமபுரி மாணவன் தற்கொலை… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்…!!

AMARA

மின்சாரம் தாக்கி இறந்த யானையையும் விட்டு வைக்காத கயவர்கள்… ஊட்டியில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

NEWSKADAI

தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்தா..? அரசின் முடிவு என்ன..?

MANIMARAN M