Newskadai.com
அரசியல்

“எங்க கோவணத்தையும் உருவிடாதீங்க”… நாமம் போட்டு விவசாயிகள் போராட்டம்..!!

Share this:

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் ரயில் மறியல் போராட்டங்கள் மற்றும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பல ஊர்களிலும், குறிப்பாக திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம், மதுரையில் காய்கறி மாலை அணிந்து வேளாண் சட்ட நகல் கிழிப்பு போராட்டம் என போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பட்டை நாமம் போட்டுக் கொண்டு மண் சட்டியோடு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் கடை வீதியில் திருவோணம் வட்டார விவசாய நலசங்க விவசாயிகள் ஏர் கலப்பையை தூக்கிக் கொண்டு அரை நிர்வாண கோலத்தில் தலையில் மண் சட்டியுடன் உடலில் நாமம் போட்டுக் கொண்டு ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி முழக்கமிட்டனர். “மோடி அரசே! எடப்பாடி அரசே! பறிக்காதே! பறிக்காதே.! விவசாயிகளின் உரிமையை பறிக்காதே..! பறிக்காதே பறிக்காதே விவசாயாகளின் கோவணத்தை பறிக்காதே!’ என்று மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Share this:

Related posts

இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப்போகிறோம்?… தொடரும் நீட் தேர்வு தற்கொலையால் தலைவர்கள் கொந்தளிப்பு…!!

AMARA

“எஸ்.பி.பி. உடலுக்கு முழு அரசு மரியாதை”… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு…!

AMARA

ஊழலுக்கு கதவு திறக்கும் இ-பாஸ் நடைமுறை தேவையில்லை”… முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…!!

THAVAMANI NATARAJAN

கல்வி கொள்கையின் மாற்றத்தை அனைவரும் ஏற்க வேண்டும்… புதிய கல்விக்கொள்கை மாநாட்டில் பிரதமர் மோடி உரை…!!

THAVAMANI NATARAJAN

ம.பி முதல்வர் போல அதிரடி காட்டுங்க… எடப்பாடியாரை உசுப்பேத்தும் ராமதாஸ்…

MANIMARAN M

#BREAKING கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு வழக்கில் அதிரடி… காதல் மனைவியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆணை…!

NEWSKADAI