Newskadai.com
லைஃப் ஸ்டைல்

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு இன்று முதல் ஆன்லைன் புக்கிங்…

Thirupathi
Share this:

கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பொதுமக்களுக்கான தரிசனத்தை கோயில் நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்தது. நோய் பரவல் குறைந்து கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த 11ம் தேதி முதல் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்தது திருப்பதி தேவஸ்தானம். இதை தொடர்ந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க துவங்கினர். இதற்கான இலவச தரிசனத்திற்கு திருப்பதியிலேயே மூன்று இடங்களில் தினமும் 3000 டோக்கன்கள்  பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. Thirupathi

இந்நிலையில் செப்டம்பர் மாத சிறப்பு தரிசனத்திற்கு இன்று 24.08.2020 காலை 11 மணிக்கு ஆன்லைன் மூலம் ரூ 300-க்கான சிறப்பு தரிசன டிக்கட்டுகளை பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒரு நாளைக்கு 9000 பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

Thirupathi

மேலும், வரும் செப்டம்பர் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுவதால் 10 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


Share this:

Related posts

உடல் பருமனை குறைக்க இத செஞ்சு பாருங்க…

NEWSKADAI

கொரோனாவிற்கு எதிராக போர் புரிய வரும் AZD-1222

NEWSKADAI

இன்று கொஞ்சம் கவனம் தேவை: வம்பு-வழக்குகளில் விலகி இருங்கள், முருகப்பெருமானை வழிபாடுங்கள்…

NEWSKADAI

மக்களே உஷார்: இதுவும் கொரோனா அறிகுறிகள்தான்… மருத்துவர் விளக்கம்

MANIMARAN M

வீட்டிலேயே ஆடு வளர்த்தோம், கோழி வளர்த்தோம்.. இப்ப முத்தும் வளர்க்கலாம்…

NEWSKADAI

அடடா… இன்னைக்கு எல்லா ராசிக்காரங்களுக்கும் அமோகமா இருக்கே…!!.

THAVAMANI NATARAJAN