Newskadai.com
இந்தியா

“இதுவரை பக்க விளைவுகளே இல்லை”… இறுதி கட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து…!!

Covaxin 1
Share this:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் என்ற மருத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு இறுதிக் கட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. முதற்கட்டமாக இந்த மருந்து இந்தியாவில் 30 தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வெற்றி அடைந்தது. அதைத் தொடர்ந்து மேலும் 150 நபருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக அந்த மருந்து செலுத்தப்பட்டு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இவர்களது உடல் நிலை ஆறு மாதங்கள் வரை தொடர்ந்துக் கண்காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கோவேக்சின் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை இந்த கோவேக்சின் தடுப்பு மருந்து பாதுகாப்பான மருந்தாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மருந்தின் தன்மை மற்றும் அதன் செயல்திறன் ஆகியவற்றை 6 மாதங்கள் தொடர் பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே முழுமையான முடிவுகள் தெரியவரும் என்றும் அந்த முடிவுகளுக்கு பின்னரே கோவேக்சின் தடுப்பு மருந்து பொது மக்கள் பயன்பாட்டுக் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

“உங்க மேக் இன் இந்தியா, தற்சார்பு பேச்செல்லாம் பித்தலாட்டம்”… மத்திய அரசை வெளுத்து வாங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்…!!

POONKUZHALI

சினிமா தாதாக்களை மிஞ்சும் ’தங்க கொரோனா மாஸ்க்’ தாதா…

NEWSKADAI

சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்… இடிபாடுகளில் சிக்கிய 200 பேர் கதி என்ன???

MANIMARAN M

கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து..! மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி…

MANIMARAN M

விமான நிலைய குத்தகை விவகாரம்: மத்திய அரசுக்கு மாஸாக எதிர்ப்பு காட்டிய பினராயி விஜயன்…!!

MANIMARAN M

சிக்கிய சீன நிறுவனங்கள் : ஆயிரம் கோடி ஹவாலா மோசடி… அதிரடி காட்டும் இந்தியா

MANIMARAN M