Newskadai.com
விளையாட்டு

சிஎஸ்கே ஒரு மிகப்பெரிய “ஓட்டை கப்பல்” தல தோனி ஓபன் டாக்…

Share this:

சிஎஸ்கே எனும் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் இருக்கிறது. மிகப்பெரிய ஷாட்கள் ஆடக்கூடிய வீரர்கள் இல்லாதது மிகப்பெரிய குறை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார். ஐபிஎல்(2020) தொடரின் 25வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது சென்னை அணி. சிஎஸ்கேவின் நட்சத்திர தொடக்க வீரர்கள் டுப்ளெசிஸ் மற்றும் ஷேன் வாட்சன் ஆகிய இருவரும் பவர்ப்ளேயில் வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து ராயுடு மற்றும் ஜெகதீஷன் இணை களமிறங்கியது. இந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் விளையாடிய ஜெகதீஷன் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய தோனி 10 ரன்களிலும் சாம் கரன் ரன்னே எடுக்காமலும் ஆட்டமிழக்க, அவர்களை தொடர்ந்து ராயுடுவும் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜடேஜா மற்றும் பிராவோ இருவரும் தலா 7 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

போட்டி முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய நம்ம தல தோனி, “நாங்கள் பந்து வீசிய கடைசி 4 ஓவர்கள் இன்னும் கட்டுக்கோப்பாகப் பந்து வீசி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். பேட்டிங்கைப் பொறுத்தவரை அணியின் பலவீனம் இன்று வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. பேட்டிங்கில் மிகப்பெரிய ஷாட்களை ஆடுவது அவசியம். அடுத்து வரும் போட்டிகளில் மிகப்பெரிய ஷாட்களை ஆட வேண்டும். இந்த போட்டியில் 6-வது ஓவரிலிருந்து பேட்டிங்கில் சக்தி இழந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.

6-வது ஓவரிலிருந்து 14-வது ஓவர் வரை எதிரணி பந்துவீச்சாளர்களின் திட்டத்துக்கு எதிராக சரியான வியூகங்களை வகுத்து பேட்ஸ்மேன்கள் ஆடவில்லை. நான் வீரர்களிடம் அடிக்கடி கூறுவது ஒன்றுதான் கடந்த போட்டியின் முடிவைப் பற்றி நினைத்தால் உங்களுக்கு சுமைதான் அதிகரிக்கும். தற்போது நடப்பில் உள்ள போட்டியின் மீதும், அதை எவ்வாறு வெற்றிகரமாக முடிப்பது என்பதிலும் கவனம் செலுத்துங்கள் என்றுதான் கூறுவேன்.

எங்கள் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஏராளமான சுழற்பந்துவீச்சாளர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கிறார்கள். ஆனால், ஏதாவது ஒரு இடத்தில்தான் ஒருவர் விளையாட முடியும். முதலில் 5 பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடினோம், இப்போது 6 பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுகிறோம். எங்களின் மிகப்பெரிய கவலை பேட்டிங்தான். அடுத்து வரும் போட்டிகளில் பேட்டிங்கை சரி செய்ய தீவிரமாக முயற்சிப்போம்” இவ்வாறு தோனி தெரிவி்த்தார்.


Share this:

Related posts

2020 IPL கொண்டாட்டம் : போட்டி அட்டவணை வெளியீடு…

MANIMARAN M

அதிரிபுதிரி IPL ஆரம்பம்… சென்னையுடன் மோதும் மும்பை…

MANIMARAN M

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வெற்றிக்கு காரணம் என்ன..? தோனியின் ருசிகர பேட்டி..!!

MANIMARAN M

மும்பை இந்தியன்ஸை வெளுத்து வாங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ்…

MANIMARAN M

IPL கொண்டாட்டம் : “பாக்கத்தானே போறீங்க காளியோடு ஆட்டத்த, எடுடா வண்டிய… போடுடா விசில”… இம்ரான் தாஹிர் அதிரடி..

MANIMARAN M

சிஎஸ்கே உடன் மீண்டும் இணைந்த நட்சத்திர வீரர்… விசில் போட்டு கொண்டாடும் சென்னை ரசிகர்கள்…

MANIMARAN M