Newskadai.com
தமிழ்நாடு

தொடர்ந்து திருடப்படும் மின்கம்பிகள்… போலீசாருக்கு தண்ணி காட்டும் மர்ம கும்பல்.!!!

Theft copper
Share this:

தமிழகத்தில் நூதன முறையில் திருடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில்  பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த செல்போன் டவர்களின் பாகங்களை  மர்ம கும்பல் திருடி வந்த நிலையில் தற்போது கோவையில் மின்மாற்றியில் உள்ள செம்பு கம்பிகளை திருடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் அரசூர் பகுதியிலிருந்து பெத்தாம்பாளையம் செல்லும் பாதையில் கேரளா அரசு மின் வாரியத்திற்கு மின் கேபிள்களை விநியோகம் செய்பும் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலைகளுக்கு தனியாக மின் பாதை அமைக்கப்பட்டு மின்மாற்றி மூலம் மின்சாரம் விநியோகிக்கப்பட்டிருந்தது.
Theft copper இந்த நிலையில் கடந்த ஆறு மாத காலமாக தொழிற்சாலைகள் இயங்காததால் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் கடந்த வியாழக்கிழமை இரவு அந்த மின்மாற்றிக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து விட்டு, மின்மாற்றியை கீழே தள்ளி அதிலிருந்த விலை உயர்ந்த செம்பு  கம்பிகளை திருடி சென்றுள்ளனர். மறுநாள் காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்கையில் செம்பு கம்பிகள் கலவாடப்பட்டிருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்மாற்றி பற்றி நன்கு தெரிந்தவர்களே இவ்வாறு செய்திருக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது போல சூலூர், அன்னூர் வட்டார பகுதிகளில் அடிக்கடி மின் கம்பிகள் கலவாடப்பட்டுள்ளது.
இதனால் இச்சம்பவத்தை செய்தவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள். உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின் பாதையில் உள்ள மின்மாற்றியில் செம்பு கம்புகள் திருடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this:

Related posts

ஆயுத பூஜையில் அலட்சியம்.. நிறைமாத பசுமாடு பலியான பரிதாபம்..!!

THAVAMANI NATARAJAN

சத்துணவு பணியாளர் பணிக்கான நேர்காணல் திடீர் நிறுத்தம் : தமிழக அரசு அறிவிப்பு…!

MANIMARAN M

மின்சாரம் தாக்கி இறந்த யானையையும் விட்டு வைக்காத கயவர்கள்… ஊட்டியில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

NEWSKADAI

கொரோனா நேரத்தில் இதுவும் நடக்கலாம்… மக்களை உஷார் படுத்திய காவல்துறை…!

NEWSKADAI

மிரட்டும் ‘நிவர்’… நாளை 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!

THAVAMANI NATARAJAN

8 மாவட்டங்களில் இடியுடன் வெளுத்து வாங்க போகும் கனமழை… வானிலை எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN