Newskadai.com
தமிழ்நாடு

கரைபுரண்டோடிய தென்பெண்ணை ஆறு… விபரீதம் புரியாமல் குளித்த இளைஞர்கள் மூழ்கி பலி…!!

River
Share this:

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஆங்காங்கே உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது, இதனால் ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைதொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மோகன்ராவ் காலனியை சேர்ந்த யாசிர் (வயது 19) துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரும்  இவரது நண்பர் கர்நாடக மாநிலம் பெங்களூரை அடுத்துள்ள பானசவாடியை சேர்ந்த இர்பான் (வயது 26) என்பவரும் சகோதரிகளுடன் கடந்த 11 தேதி கும்மனூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

Krishnakiriஅந்த நேரத்தில் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் குளிக்க சென்ற யாசிர், இர்பான் ஆகிய 2 பேரும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து 2 பேரையும் தேடியிருக்கிறார்கள். இருள் சூழ்ந்ததால், வாலிபர்கள் இருவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. தீயணைப்புத்துறையினர் மற்றும் கிருஷ்ணகிரி போலீசார் இணைந்து வாலிபர்களை தேடும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டள்ளனர். இதில் யாசிர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் வாலிபரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் இர்பான் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இர்பானை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.


Share this:

Related posts

இன்று முதல் லாக்டவுன்… ஊரடங்கை மதிக்கிறார்களா ஜலகைவாசிகள்??

AMARA

ஓணம் பண்டிகை : கோவை மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!!!

MANIMARAN M

ம.பி முதல்வர் போல அதிரடி காட்டுங்க… எடப்பாடியாரை உசுப்பேத்தும் ராமதாஸ்…

MANIMARAN M

ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடியார்… விநாயக சதூர்த்தி ஊர்வலங்களுக்கு தடை…

MANIMARAN M

இந்திய ரேஷன் கடைகளில் முதன்முறையாக… தமிழகத்தில் வருகிறது… மொபைல் ரேஷன் ஷாப்…

MANIMARAN M

பவானி ஆற்றில் வெள்ளபெருக்கு… பவானிஸ்வரர் கோவிலுக்கு அபாய எச்சரிக்கை..!!

THAVAMANI NATARAJAN