Newskadai.com
தமிழ்நாடு

தூக்கில் தொங்குவது போல் செல்ஃபி… வினையாய் முடிந்த இளைஞரின் விபரீத விளையாட்டு…!!

Share this:

தேனி மாவட்டம் பொம்மி நாயக்கன்பட்டியை சேர்ந்த திரவியம்(24) விளையாட்டிற்காக தூக்கில் தொங்குவது போல் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். காரைக்குடி அருகில் உள்ள தேவகோட்டையில் தனது உறவினர் வீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். எங்கு சென்றாலும் செல்ஃபி எடுக்கும் பழக்கமுடையவராக இருந்து வந்த திரவியம் நேற்று அதிகாலை வேலைக்கு செல்வதற்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்வது போல் செல்ஃபி எடுத்துள்ளார்.

மேலும் படிக்க : http://நீட் தேர்வால் தருமபுரி மாணவன் தற்கொலை… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்…!!

விளையாட்டிற்காக தூக்கில் தொங்குவது போல் செல்ஃபி எடுக்கும் ஆசையில், தனது வேட்டியை மேலிருந்த மின்விசிறியில் கட்டிக் கொண்டு, நாற்காலியில் ஏறி தூக்கு மாட்டுவது போல் கழுத்தில் வேட்டியை மாட்டிக் கொண்டு செல்ஃபி எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது உறவினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். எதிர்பாராதவிதமாக நாற்காலி சரிந்ததால் நாற்காலி மேல் நின்றிருந்த திரவியம் கழுத்தில் அவர் மாட்டி வைத்திருந்த வேட்டியில் அப்படியே தொங்கினார். இதில் கழுத்து இறுகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சாக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Share this:

Related posts

சேலத்தில் கொரோனாவுக்கு சூப்பர் ட்ரீட்மெண்ட்… திறந்தாச்சு சித்த மருத்துவ மையம்…!!

THAVAMANI NATARAJAN

ஜலகையில் கொரோனா பீதியில் முதியவர் உயிரிழப்பு… அதிர்ச்சியில் மக்கள்…!!

NEWSKADAI

கள்ளக்காதலால் 3 வயது குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்… ஈவு இரக்கமற்ற தாயின் கொடூர செயல்…!!

POONKUZHALI

கொரோனா வரமா?… சாபமா…? கொடிய தொற்றிடமிருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன?

NEWSKADAI

செஞ்சுரி அடிக்க போகுது மேட்டூர் அணை… நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

THAVAMANI NATARAJAN

ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்கும் “Swiggy”… கொதித்தெழும் சீமான்..

MANIMARAN M