Newskadai.com
இந்தியா

பிரதமர் மோடி திறந்து வைத்த உலகின் மிக நீளமான அடல் சுரங்க பாதையில்… இத்தனை சிறப்பம்சங்களா?

Share this:

உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்பணித்துள்ளார். அதன் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது காணலாம்… 

இமாச்சலப்பிரதேசத்தில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. ஆஸ்திரேலிய நாட்டின் தொழில் நுட்பத்துடன் 4 ஆயிரம் கோடி செலவில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரமுள்ள இந்த பாலம் சுமார் 9 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதை திறப்பின் மூலம் மணாலி- லே இடையே பயணதூரம் 46கிலோமீட்டர் குறையும். ரோட்டங் பகுதியில் 9.02கிலோ மீட்டர் நீளத்துக்கு உள்ள சுரங்கப்பாதையால், பயண நேரமும் 5மணி நேரம் வரை குறையும்.

கடல் மட்டத்தில் இருந்து 10ஆயிரம் அடி உயரத்தில், 10 மீட்டர் அகலத்தில் சுரங்கப் பாதை அமைந்துள்ளது.

குதிரை லாட வடிவில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில், 3000கார்கள், 1500 லாரிகள் செல்ல முடியும்.

உலகிலேயே நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமான சுரங்கபாதையான இதை கட்டி முடிக்க 10 ஆண்டுகள் கடின உழைப்பு செலுத்தப்பட்டுள்ளது.

 

250 மீட்டர் இடைவெளியில் சிசிடிவி கேமராக்கள், 60 மீட்டர் இடைவெளியில் தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

AtalTunnelToOneIndia

ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஒரு அவசர கால வெளியேறு பாதை அமைக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

தற்சார்பு இந்தியாவை உருவாக்க சபதமேற்போம்…பிரதமர் மோடியின் சுதந்திர தின சூளுரை

MANIMARAN M

தவறுதலாக வெடித்த துப்பாக்கி… மார்பில் குண்டு பாய்ந்து மரணமடைந்த டிஜிபி…!!

THAVAMANI NATARAJAN

உலகின் மிக நீளமான “குகைவழிப் பாதை” : இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!!

MANIMARAN M

உயர் கல்விக்கு விடுப்பு… புதிய கல்விக்கொள்ளையின் முக்கிய அம்சங்கள் என்ன?

MANIMARAN M

உ.பி யில் பிரம்மாண்டமான சினிமா நகரம் : முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு..!!

MANIMARAN M

சிக்கிய சீன நிறுவனங்கள் : ஆயிரம் கோடி ஹவாலா மோசடி… அதிரடி காட்டும் இந்தியா

MANIMARAN M