Newskadai.com
தமிழ்நாடு

திருமணமாகி 4 மாதமே ஆன புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… தாலி, மெட்டியை கழட்டி கணவனிடம் கொடுக்க வைத்த அதிகாரிகள்…!

Share this:

கொரோனா தொற்று பரவலால் பள்ளி கல்லுரிகளை திறக்காத நிலையில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மருத்துவத்துறையில் படிக்க தகுதி தேர்வது நடத்தப்பட்டது. நீட் தேர்வானது பல்வேறான இடர்பாடுகளுக்கு பிறகு வெற்றிகரமாக நேற்று நடந்தது. நீட் தேர்வு மையங்கள் அமைந்துள்ள வளாகங்களுக்குள் கடும் சோதனைக்கு பிறகே மாணக்கர்கள் அனுமதிக்கப்படனர்.

தமிழகத்தில் 1,17,990 மாணக்கர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 14 நகரங்களில் 238 மையங்களில் தேர்வு நடைபெற்றது. காலை 11 மணி முதல் தேர்வு மைய வளாகத்திற்குள் மாணக்கர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்வு நடந்தது.

NEET

 உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்ட பிறகு அனுமதி தரப்படுகிறது. தேர்வு மைய வளாகத்தில் மாணக்கர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. அடையாள அட்டை, ஹால் டிக்கெட், சானிடைசர், தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டது.  நீட் தேர்வு மையத்திற்குள் நகைகள் எதையும் அணிந்து வர அனுமதி கிடையாது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சேர்ந்த வாசுதேவன் என்பவரின் மனைவி முத்துலட்சமி நெல்லை மாவட்ட தேர்வு மையத்திற்கு வந்தபோது கழுத்தில் இருந்த தாலி மற்றும் காலில் அணிந்திருந்த மெட்டியை கழற்றிவிட்டு தேர்வு எழுத சென்றார்.

திருமணம் ஆகி நான்கு மாதங்களே ஆன நிலையில் தாலியை கழட்டி விட்டு தேர்வு எழுத அனுமதித்தது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. மாணவிகள் தங்களின் காதணி, சங்கலி போன்றவற்றை கழற்றி பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு தேர்வு மையத்திற்குள் சென்றனர். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை கிட்டதட்ட 6 மணி நேரம் உள்ளே இருக்க வேண்டும் என்பதால் தேர்வு எழுதுவதற்கு முன்பாக பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சிக்கு நீட் தேர்வு எழுத சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த 63 மாணவ, மாணவியருக்கு, ஓயாத அலைகள் என்ற அமைப்பு வாகன ஏற்பாடு செய்துள்ளது. உணவு, முகக்கவசங்கள், கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களையும் அந்த அமைப்பினர் வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு 409 மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.


Share this:

Related posts

சதுரங்க வேட்டை பாணியில் சீட்டு கம்பெனியின் சீட்டிங்… ஆயிரக்கணக்கானோர் கதறல்…!!

NEWSKADAI

2021 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்… அதிரடி அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

அம்மாடியோவ்… இருமடங்காக அதிகரிக்கப்பட்டது மேட்டூர் அணை நீர் திறப்பு…!!

THAVAMANI NATARAJAN

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI

பற்றி எரியும் மீனவ கிராமம்… கடலூரில் இருதரப்பினர் இடையே வெடித்த மோதல்… வைரல் வீடியோ…!!

NEWSKADAI

மன்னார்குடின்னாலே பிரச்சனையா?… அரசு அதிகாரிகளின் மெகா ஊழலை அம்பலப்படுத்திய மக்கள்…!!

MANIMARAN M