Newskadai.com
தமிழ்நாடு

6 வருடங்களாக அலைக்கழிப்பு… மேட்டூர் தாசில்தார் காலில் விழுந்து கதறிய அபலை பெண்…!

Share this:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள திம்மன்வளவை சேர்ந்தவர் மாதேஷ் இவரது மனைவி விஜயா. குடிசை வீட்டில் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இந்த நிலத்திற்கு பட்டா கேட்டு கடந்த 6 ஆண்டுகளாக மேட்டூர் தாசில்தார், சப் கலெக்டர், கலெக்டர் மற்றும் முதல்வரிடம் தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் பெய்த மழையால் மாதேஷின் குடிசை சேதமடைந்துள்ளது. வேலையும் இல்லாததால் அவரால் அந்த கூரையை வேய முடியவில்லை.

Patta

இந்த நிலையில் நேற்று காலை தனது 3 குழந்தைகளுடன் மேட்டூர் சப்கலெக்டர் அலுவலகம் சென்று தாங்கள் காவிரியில் குதித்து தற்கொலை செய்துகொள்வதாக கூறினார். அந்த சமயத்தில் வந்த தாசில்தார் சுமதி அவர்களிடம் மனுவை கொடுத்த விஜயா காலில் விழுந்து கதறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி நங்கவள்ளி போலீசாரை தொடர்புகொண்டு விஜயாவின் வீட்டை வேய உதவி செய்யும்படி கூறினார். பின்னர் அவரது மனுவை சப்கலெக்டர் பார்வைக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார்.


Share this:

Related posts

அய்யா… குளத்த காணோம்யா…குளத்த காணோம்… கண்டுபிடிச்சிக் குடுங்கய்யா…

MANIMARAN M

தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு??…. விரைவில் முதல்வர் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு…!!

AMARA

அடித்து நொறுக்கிய கன மழையால்… வெள்ளக்காடாய் மாறிய சேலம்..!!.

THAVAMANI NATARAJAN

ஹிந்தி தெரியாதா..? லோன் கிடையாது… தமிழகத்தில் டாக்டருக்கு நேர்ந்த அவலம்…

MANIMARAN M

கொரோனா காலத்திலும் குறைவில்லாத சேவை… நாகர்கோவிலில் அசத்தும் ராணுவ வீரர்கள்…!

AMARA

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களே உஷார்… கொட்டி தீர்க்க காத்திருக்கும் மழை…!!

THAVAMANI NATARAJAN