Newskadai.com
தமிழ்நாடு

தாலி சங்கலிக்காக கணவரை போட்டுத்தள்ளிய மனைவி… ஹாஸ்பிட்டலில் அவிழ்த்துவிட்ட புளூகு மூட்டைகள்…!

murder
Share this:

கொரோனா வைரஸ்  தொற்று பரவலால் உலகமே பொருளாதார வீழ்ச்சி கண்ட நிலையில் சாதாரண மக்களின்  வாழ்க்கையில் பொருளாதார பாதிப்பு ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இந்த நிலையில் கோவை வெரைட்டிஹால் அருகேயுள்ள திருமால் வீதியை சேர்ந்தவர் பிராங்ளின் பிரிட்டோ இவருக்கு வயது 35 இவர் பீளமேடு பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கரோலின் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் பிராங்ளின் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை  பெற்று வந்துள்ளார்.

killed

இதனால் பொருளாதார சிக்கலில் சிக்கிய பிராங்ளின் மனைவியின் தாலிச் செயினை அடகு வைத்து விட்டார் என சொல்லப்படுகிறது. வெகு நாட்களாகியும் தனது கணவர் தாலிச் செயினை மீட்டு தராததால் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல கணவனிடம் தாலிச் செயினை மீட்டு தரவேண்டும் தொடர் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். அப்படி கோவத்தில் சண்டை போட்டுக்கொண்டிருந்த போது,  கணவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதன் பிறகு காய்கறி வெட்டும்போது கத்தி தெரியாமல் பட்டு விட்டதாக கணவனை கரோலின் மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் போகும் வழியிலேயே பரிதாபமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கரோலின் கோபத்தில் கணவரை கத்தியால் குத்தி கொலை  செய்தது தெரிய வந்தது. மேலும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Share this:

Related posts

பில்லி, சூனியம் எடுப்பதாக பூஜை… 105 சவரன் நகையுடன் தப்பிய ‘சூனியக்காரி’ கைது…!

THAVAMANI NATARAJAN

வெடிகுண்டு வீச்சில் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியுதவி… முதல்வர் அறிவிப்பு…

MANIMARAN M

எட்டாக் கனியான ஆன்லைன் கல்வி… கூலித் தொழிலாளர்களாக மாறி வரும் குழந்தைகள்…!!

MANIMARAN M

ஒரே ஆண்டில் 2வது முறை… அடித்து தூக்கிய மேட்டூர் அணை…!!

THAVAMANI NATARAJAN

“எங்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேணும்”… அதிரடி கோரிக்கையுடன் போராட்டத்தில் குதித்த கோவை விவசாயிகள்…!!

MANIMARAN M

கோவிலுக்குள் கொன்று புதைப்பட்ட இளைஞர் சடலம்… கள்ளக் காதலால் அர்ச்சகர் செய்த கொடூரம்…!!

MANIMARAN M