Newskadai.com
சினிமா

அள்ளிக்கொடுத்த கலியுக கர்ணன் சோனு சூட்… விருது கொடுத்து கெளரவித்த ஐ.நா…!

Sonu
Share this:

கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு உதவிபுரியும் வகையில் அரசியல்வாதிகள், தன்னார்வலர்கள், சினிமா துறையினர் என பலரும் உதவிபுரிந்தனர். அந்த வரிசையில் பாலிவுட் வில்லன் நடிகரான சோனு சூட் அவர்கள் தன்னால் முடிந்த அளவிற்கு மக்களுக்கு உதவி புரிந்துள்ளார். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பஸ் வசதி செய்த கொடுத்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பியது, மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவிலிருந்து வர விமானம் ஏற்பாடு செய்து தந்தது, உதவி தேவைப்படும் ஏழை மக்களுக்கு உதவி செய்வது என பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

இந்த நிலையில் அவரது சேவையை பாராட்டி ஐநா மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது (UNDP’s Humanitarian Action Award-United Nations Development Programme’s (UNDP) Prestigious SDG Special Humanitarian Action Award) சோனு சூட்டுக்கு கடந்த 28ம் தேதி வழங்கப்பட்டது.  இவ்விருதினை இதற்கு முன்பு ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லியோனார்டோ டிகாப்ரியோ,  பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் பெற்றுள்ளனர். தற்போது இந்த பிரபலங்கள் வரிசையில் சோனு சூட்டும் இணைந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி என் நாட்டு மக்களுக்கு உதவி செய்கிறேன், ஐ.நா அளித்துள்ள இந்த அங்கீகாரம் சிறப்பு மிக்கது, இந்த மரியாதையை எனக்கு அளித்தது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது எனக்கூறியுள்ளார்.


Share this:

Related posts

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினுக்கு கொரோனா… கலக்கத்தில் கோலிவுட்…!!

AMARA

சீமானையும், ஹரி நாடாரையும் சும்மா விடாதீங்க… தற்கொலை முயற்சிக்கு முன் விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI

அதிக சம்பளம் கேட்டு அடம்பிடித்த நயன்தாரா… அலறியடித்து ஓடிய பிரபல தயாரிப்பாளர்…!!

THAVAMANI NATARAJAN

எஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா…!

AMARA

மீண்டும் அப்பாவானார் நடிகர் கார்த்தி… என்ன குழந்தை தெரியுமா?

NEWSKADAI

“பிஎம் நரேந்திர மோடி” – அக்டோபர் 15-ல் செகண்ட் ரிலீஸ்

MANIMARAN M