Newskadai.com
உலகம்

இந்தியாவுக்கு அனுப்பவே முடியாது – இங்கிலாந்து அரசு திட்டவட்டம்..!!

vaccine for all
Share this:

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பல வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு ஓடி, லண்டனில் வாழ்ந்து வருகிறார். இது தொடர்பாக விஜய் மல்லையா மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த மோசடி வழக்கில் விஜய் மல்லையா குற்றாவாளி என கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். லண்டனிலிருந்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர இந்தியா முயற்சித்து வருகிறது. இந்நிலையில் சட்டரீதியான ரகசிய தீர்மானம் காரணமாக விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அனுப்ப இயலாது என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இதனால் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வழக்கு தொடர்பாக இங்கிலாந்து அரசுடன் பேச்சு நடத்தி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Share this:

Related posts

காங்கோ தங்க சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு… குழந்தைகள் உட்பட50 பேர் பலி…!!

AMARA

கதறி துடித்த இந்துக்கள்… உடனடி உத்தரவு போட்ட பக்ரைன் அரசு… மெய் சிலிர்க்க வைக்கும் உண்மை!!!

NEWSKADAI

“ட்ரம்பின் அப்பனுக்கே அது தெரியாது”… அமெரிக்க அதிபரின் முகத்திரையை கிழித்த அண்ணன் மகள்…!

NEWSKADAI

ஹேப்பி நியூஸ்: மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி – வெளியானது அசத்தல் அறிவிப்பு

MANIMARAN M

டிரம்பை எச்சரித்த ஒபாமா… அனல் பறக்கும் அமெரிக்க அரசியல்…!!

MANIMARAN M

இந்த நாட்டை விட்டு போறத தவிர எனக்கு வேற வழியே இல்லடா?… ஓட்டுக்காக ட்ரம்ப் ஆடும் புது ஆட்டம்…!

MANIMARAN M