Newskadai.com
தமிழ்நாடு

சத்துணவு பணியாளர் பணிக்கான நேர்காணல் திடீர் நிறுத்தம் : தமிழக அரசு அறிவிப்பு…!

Share this:

சத்துணவு பணியாளர் பணிக்கான நேர்காணல் தேர்வை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கடந்த மாதம் அரசு அறிவித்திருந்தது. இதற்கான விண்ணப்பங்களை பூர்த்திசெய்து தொடர்புடைய அலுவலங்களில் நேரடியாக கொடுத்து ரசீது பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

School

மேலும் படிக்க : http://ஒரு ரூபாய் நோட்டு வைத்திருந்தால் நீங்களும் லட்சாதிபதிதான்..!!

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சத்துணவு அமைப்பாளர் பணிக்கு 10-ம் வகுப்பும், சமையல் உதவியாளர் பணிக்கு 5-ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தகுதி வெளியிடப்பட்டிருந்தது. குறைந்த கல்வித் தகுதியில் அரசு பணி கிடைப்பதால் அதிகமானோர் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். கொரொனா ஊரடங்கினையும் மீறி பல இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சத்துணவு பணியாளர் பணிக்கான நேர்காணல் தேர்வை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், சத்துணவு பணியாளர் காலிப் பணியிடங்களுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளதால் நேர்காணலில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கலந்துக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரொனா நோய் தொற்று முற்றிலும் நீங்காத நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கையாக சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

கொதித்தெழுந்த மன்னார்குடி விவசாயிகள்… வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்…!!

MANIMARAN M

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்… துக்கத்தில் தொண்டர்கள்…!

NEWSKADAI

விரைவில் சென்னை – கன்னியாகுமரி கடல்வழிப் போக்குவரத்து – மத்திய அரசு அதிரடி…!

MANIMARAN M

இன்னும் இரண்டே நாள்: சான்று பெற்ற பணியாளர்களுக்கு மட்டும் தொடங்குகிறது அதிரடி சேவை…!

MANIMARAN M

“நிலம் கையக்கப்படுத்த உரிமையாளரிடம் ஆலோசிக்க தேவையில்லை”…. அதிரடி சட்டத்தை நிறைவேற்றியது தமிழக அரசு…!!

MANIMARAN M

கோடிக்கணக்கில் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம்… சிக்கிய அதிகாரி..!!

MANIMARAN M