Newskadai.com
இந்தியா

ஸ்கூட்டரில் 56 ஆயிரம் கிலோ மீட்டர் ஆன்மீக சுற்றுலா… ஏழை தாயின் ஆசையை நிறைவேற்றிய அன்பு மகன்..!!

BikeRides
Share this:

பெங்களுரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கிருஷ்ணகுமார், தனது தாயின் ஆசையை நிறைவேற்ற 56,000 கி.மீ ஸ்கூட்டர் பயணம் செய்து முடித்துள்ளார். இவர் கர்நாடக மாநிலம் மைசூர் போகாதி பகுதியில் வசித்து வருகிறார், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை உயிரிழந்ததால் இவரின் தாய் ரத்னம்மாள் (70) தனிமையில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் பேளூரில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்ல பல நாட்களாக முயற்சித்தும் நடக்கவில்லை என்று தன் மகனிடம் விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயின் மனதை புரிந்து கொண்ட கிருஷ்ணகுமார் தன் தாயை இந்தியா முழுவதும் ஆன்மீக பயணம் அழைத்துச்செல்ல விரும்பினார், அதற்காக தனது தந்தை 40 ஆண்டுகளாக பயன்படுத்திய ஸ்கூட்டரில் தாயை அழைத்து செல்ல முடிவெடுத்தார்.

amma

இதற்கான பயணத்தை கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி துவங்கிய கிருஷ்ணகுமார், முதலில் தன் தாயுடன் பேளூர் ஒலேபீடு கோவிலுக்கு சென்று தன் தாயை மகிழ்ச்சியடைய செய்தார், இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, கோவா, மராட்டியம், புதுச்சேரி, சத்தீஸ்கர் என பல்வேறு மாநிலங்களில் உள்ள இந்து கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயம் என்று மத வேறுபாடின்றி தாயுடன் வழிபாடுகளை நடத்தினர். இரண்டு ஆண்டுகள் 9 மாதங்கள் ஆன்மீக பயணம் மேற்கொண்ட நிலையில் நேற்று முன் தினம் சொந்த ஊருக்கு திரும்பி வந்தடைந்தனர், இவர்களுக்கு உறவினர்கள் மகிழ்ச்சியில் வரவேற்றனர். இவர் தாயின் மீது கொண்ட அன்பினை கண்டு வியந்து வருகின்றனர்.


Share this:

Related posts

“மாணவர்கள் மன உளைச்சலுக்கு பெற்றோர்களே காரணம்”… பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு…!!

MANIMARAN M

ஒரு ரூபாய் நோட்டு வைத்திருந்தால் நீங்களும் லட்சாதிபதிதான்..!!

THAVAMANI NATARAJAN

குட் நியூஸ் : ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி…

MANIMARAN M

கொரோனாவிலிருந்து மீண்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா…. கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்…!!

NEWSKADAI

சீட்டுகட்டு போல் சரிந்து விழுந்த அடுக்கு மாடி கட்டிடம்… 8 பேர் பலி… அதிர்ச்சி வீடியோ…!!

NEWSKADAI

கொரோனா தடுப்பு மருந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் – பிரதமர் மோடி

MANIMARAN M