Newskadai.com
லைஃப் ஸ்டைல்

அப்பாவிடம் பணத்தை ‘அபகரிக்க’ திட்டம்… 13 வயது மகன் போட்ட பகீர் ‘ஸ்கெட்ச்’… திடுக்கிட வைக்கும் தகவல்கள்…!

Money cheating
Share this:

உலகில் தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருவதால் எந்த அளவு நாம் பயன் அடைகிறோமோ அதே அளவிற்கு, அதே தொழில்நுட்பத்தால் பாதிப்பும் அடைகிறோம் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அந்த வகையில் சிறுவர்கள் அதிக அளவில் செல்போன்களை பயன்படுத்துவதால் தவறான பாதையில் செல்கிறார்கள். இன்றை கட்டத்தில் ஒரு குழந்தையை நல்ல வழியில் வளர்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. சிறுவர்கள் விளையாட்டிற்காக பணத்தை விரயம் செய்து வரும் செய்திகளை நாம் அதிக அளவில் பார்த்து வருகிறோம். குறிப்பாக பப்ஜி, ஃப்ரீ பையர் ஆகிய விளையாட்டிற்காக மொபைல்களை பயன்படுத்தி அதனால் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவது போன்ற செய்திகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன.

Money cheatingஆனால் இச்சிறுவர்களையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு சென்னையில் ஒரு சிறுவன் நடத்திய நாடகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பைக் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வரும் ராம் என்பவரின் மகன் அஜித், 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அஜித் வழக்கம் போல் டியூசனுக்கு சென்றுள்ளார். அப்போது டியூசனுக்கு செல்லும் போது தன்னை  யாரோ கடத்தி சென்று விட்டதாக தந்தைக்கு போன் செய்துள்ளான். இதனையடுத்து தந்தை அளித்த புகாரின் அடிட்படையில் சிசிடிவி காட்சிகைள ஆய்வு செய்து போலீஸ் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆனால் விசாரணையில் டியூசனுக்கு செல்வது போல் ஒரு ஆட்டோவில் ஏறிச்சென்ற அஜித், நண்பர்களுடன் சேர்ந்து அப்பாவிற்கு போன் செய்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிறுவனின் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போலீசார் அவன் சேப்பாக்கம் அருகே இருப்பதை கண்டுபிடித்தனர். அங்கு சென்று அவனை மீட்டு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு சொந்த தந்தையிடமே பணம் பறிக்க திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுவனை போலீசார் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.


Share this:

Related posts

பக்தர்களின்றி இன்று துவங்கும் வேளாங்கண்ணி திருவிழா..

MANIMARAN M

குடி வெறி: தம்புல்ஸை மனைவி தலைமேல் போட்ட குடிகார கணவன்…!!

MANIMARAN M

‘ஜிம்’ போனால் மட்டும் தான் ஆரோக்கியம் கிடைக்குமா?… வீட்டிலிருந்த படியே இதை மட்டும் செய்தால் போதும்…!

NEWSKADAI

ஆபத்துகள் விலகும், கல்வி ஞானம் பெருகும் இந்த ராசிகாரர்களுக்கு…!!

THAVAMANI NATARAJAN

கூடா நட்பு கேடாய் முடியும்… தான தர்மங்கள் செய்யவும் இந்த ராசிகாரர்களே..!!

THAVAMANI NATARAJAN

”தங்கம் வாங்கலையோ தங்கம்”… கூவி விற்குமளவுக்கு குறைந்துகொண்டே இருக்கும் விலை…!!

NEWSKADAI