Newskadai.com
தமிழ்நாடு

ஊசி போட்ட செவிலியர்… மகன் கண்முன்னே துடி துடித்து உயிரிழந்த தாய்… அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்…!

Death
Share this:

தனக்கு நெருங்கிய ஒருவர் தன் கண்முன்னே உயிரிழக்கும் சம்பவம் என்பது மிகவும் கொடுமையான நிகழ்வு. இது போன்ற ஒரு நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்தறை அடுத்துள்ள செம்மங்காலை என்ற பகுதிய சேர்ந்த சந்திரிகா என்பவர் கடந்த சில நாட்களாக ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டு குழித்துறை அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

injunction

கடந்த 3ம் தேதி அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல அவரின் மகன் அனிஷ் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அந்த நேரத்தில் சந்திரிக்காவுக்கு செவிலியார் ஒருவர் ஒரு ஊசி போட்டுள்ளார், ஊசி போட்ட சில நொடிகளில் தன் மகன் முன்பாக துடி துடித்து இறந்துள்ளார். இதை கண்ட அனிஷ் செவிலியருடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார் இதற்கு அலட்சியமாக இது போல் உயிழப்பது இங்கு சகஜம் என பதில் அளித்துள்ளார். அதை அடுத்து கோபம் கொண்ட அனிஷ் செவிலியரின் அலட்சியத்தால் தன் தாய் இறந்ததாக மருத்துவமணை நிர்வாகம் மற்றும் காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார், சம்பவம் தொடர்பாக ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

முன்னாள் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… கருணாஸ் மீது பரபரப்பு புகார்…!!

THAVAMANI NATARAJAN

இன்றே கடைசி நாள்: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் இதை செய்துவிட்டீர்களா?

THAVAMANI NATARAJAN

கிருஷ்ணகிரியில் குடும்பத்தையே காலி செய்த கொரோனா… கலங்கி நிற்கும் ஊர்மக்கள்…

MANIMARAN M

குணமானாலும் 90 நாட்களுக்கு பிறகு, மீண்டும் குறிவைக்கும் கொரோனா… பாதுகாப்பு முக்கியம் மக்களே..!!

NEWSKADAI

ஆசிரியரிடம் லட்சக்கணக்கில் ஆட்டையை போட்ட ஆன்லைன் வர்த்தகம்..!!

THAVAMANI NATARAJAN

நாகை கடைக்காரர்களே உஷார்: வாடிக்கையாளர்கள் தவறு செஞ்சாலும் உங்களுக்குத் தான் அபராதம்… நகராட்சி அதிரடி உத்தரவு!!

MANIMARAN M