Newskadai.com
அரசியல்

தர்ம யுத்தத்தை துவங்குவாரா? ட்வீட் போட்டு எச்சரிக்கும் ஓபிஎஸ்..!! அதிமுகவினர் அதிர்ச்சி…

Share this:

கீதையின் வரிகளை மேற்கோள் காட்டி மக்கள் நலனுக்கேற்ப முடிவு இருக்கும் என ஓபிஎஸ் போட்டுள்ள ட்வீட் காலையிலிருந்து அதிமுக வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்கவேண்டும் என்கிற ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கை கட்சியின் செயற்குழு வரை எதிரொலித்தது. முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஓபிஎஸ்- இபிஎஸ் இணைந்து அறிவிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இருவரும் இணைந்து ஆலோசனை நடத்தியதாகத் தெரியவில்லை.

தேனிக்குச் சென்ற ஓபிஎஸ் அங்கு ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக்குப் பின் கட்சி அரசியலில் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில் கீதையின் வரிகளை மேற்கோள் காட்டி மக்கள் நலனுக்கேற்ப முடிவு இருக்கும் என ஓபிஎஸ் ட்வீட் போட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் பல்வேறு துறைசார்ந்த கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி இன்று பின்னர் மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.


Share this:

Related posts

#BREAKING முதல்வர் வேட்பாளராக எடப்பாடியே தொடர்வார்…. ஓ.பி.எஸ். வாயிலிருந்து வந்த பொன்னான அறிவிப்பு….!!

NEWSKADAI

எஸ்.வி.சேகரின் ஆசையை விரைவில் அதிமுக அரசு நிறைவேற்றும்

THAVAMANI NATARAJAN

நாட்டையே உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு வழக்கு : இன்று வெளியாகிறது தீர்ப்பு…!!!

MANIMARAN M

எடப்பாடியாரின் நல்லாட்சியால் தான் மழை வெளுத்து வாங்குகிறது… அமைச்சரின் அதிரடி பேச்சு..!!

MANIMARAN M

விஜய் சேதுபதிக்கு வலை விரிக்கும் பாஜக… வரித்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கும் குஷ்பு, அண்ணாமலை… பின்னணி என்ன?

NEWSKADAI

ரேசன் கடை மண்ணெண்ணெய் விலை அதிரடி உயர்வு… அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு…!

MANIMARAN M