Newskadai.com
அரசியல்

#BREAKING கவிழ்ந்தது காங்கிரஸ் ஆட்சி… கடைசி வரை போராடி தோற்ற நாராயணசாமி…!

Share this:

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும், தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் முதலில் 14 ஆக இருந்த நாராயணசாமியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்தது. எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 7 அதிமுகவுக்கு 4,  பாஜகவுக்கு 3 என 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Pondy

தற்போது சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரி முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், மக்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும், ஆளுநர் கிரண்பேடி கோப்புகளில் கையெழுத்திடாமல் இழுத்தடித்தார் என்றும், மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற முட்டுக்கட்டை போட்டார் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

இந்நிலையில் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதனால் அதிருப்தி அடைந்த முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இருந்து வெளியேறினர்.


Share this:

Related posts

தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்… வெளியானது தளபதியின் பரபரப்பு அறிக்கை…!

AMARA

“இந்தி தெரிந்தால் தான் இந்தியரா..?” கன்னடர்கள், பஞ்சாபிகள், வங்காளிகள் போர்கொடி…

MANIMARAN M

4வது முறையாக முதலமைச்சராகிறார் நிதிஷ்குமார்..!!! நாளை பதவியேற்பு விழா..!!!

MANIMARAN M

“கழகங்களுடன் கூட்டணி இல்லை”… இவர்களுடன் மட்டுமே கூட்டணி ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் அதிரடி….!

NEWSKADAI

“இன்னோவா அல்ல.. ஏரோப்ளேனே வாங்கிக் கொடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது”… எல். முருகனை எள்ளி நகையாடிய நாஞ்சில் சம்பத்…!!

AMARA

தமிழகத்தை வஞ்சிக்கும் ரிசர்வ் வங்கியின் நியாயமற்ற கடன் கொள்கைக்கு முதல்வர் எதிர்ப்பு… பிரதமருக்கு கடிதம்…!!

MANIMARAN M