Newskadai.com
இந்தியா

மக்களே உஷார்… காற்று மாசால் இப்படி ஒரு கொடிய நோய் பரவுதாம்… அதிர்ச்சி ரிப்போர்ட்…!

Share this:

உலகளவில் சல்பர் டை ஆக்ஸடை அதிகமாக வெளியேற்றும் நாடுகளில் இந்தியா 5ஆவது ஆண்டாக மீண்டும் முதலிடத்தில் உள்ளது. கிரீன்பீஸ் இந்தியா மற்றும் எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று பற்றிய ஆராய்ச்சி மையமான சிஆர்இஏ நடத்திய ஆய்வின் அடிப்படையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா முதலிடத்திலும், ரஷ்யா இரண்டாம் இடத்திலும், சீனா மூன்றாவது இடத்திலும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் சல்பர் டை ஆக்ஸைடு வெளியேறுவது 6 சதவீதம் குறைந்துள்ளது. சல்பர் டை ஆக்ஸைடு காற்றில் கலந்து காற்றை விஷத்தன்மையுடையாதாக மாசுப்படுத்துகின்றது. இந்த வாயு நுரையீரலையும், சுவாச மண்டலத்தையும் கடுமையாக பாதிப்படைய செய்கின்றது.

இதனால் மனிதர்களுக்கு இதய நோய், நுரையீரல் புற்று நோய், பக்கவாதம் போன்றவைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சல்பர் டை ஆக்ஸைடு வாயுவினால் இருமல், ஆஸ்துமா, சுவாச பிரச்சனை போன்றவைகளும் ஏற்படும். 

இந்தியாவில் சிங்க்ராலி, நெய்வேலி, சிபாட், ராமகுண்டம், சந்திரபூர், விசாகப்பட்டினம், சென்னை, சூரத், கோர்பா, முந்திரா ஆகிய நகரங்களில் இத்தகைய விஷத்தன்மையுடைய வாயு அதிகமாக வெளியேறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் சென்னை, நெய்வேலியில் இந்த வாயு அதிகம் வெளியேறுவதாக வந்த அறிக்கையால் சுற்றுச்சூழலியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 


Share this:

Related posts

பயங்கரவாதிகள் – ராணுவத்தினர் இடையே கடும் மோதல்… 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!

THAVAMANI NATARAJAN

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலம்… தினம் தினம் அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்..!!

MANIMARAN M

இந்திய எண்ணெய் கப்பல் தீயை அணைக்க போராடும் இந்திய, இலங்கை, ரஷ்ய கடற்படை வீரர்கள்….

MANIMARAN M

உழவுக்கு உயிர் கொடுக்கும் டிராக்டர்களையே எரித்து எதிர்ப்பு … இந்தியா கேட்டில் பதற்றம்… வீடியோ…!!

THAVAMANI NATARAJAN

தடையை மீறி நுழைய முயற்சி… ராகுல் மீது லத்தி அடி, கைது நடவடிக்கை… பரபரப்பில் உ.பி…!

NEWSKADAI

கொரோனா தொற்றுக்கு பலிகடா ஆக்கப்பட்ட தப்லீக் ஜமாஅத்… அரசுக்கு குட்டு வைத்த மும்பை உயர்நீதிமன்றம்…!!

MANIMARAN M