Newskadai.com
லைஃப் ஸ்டைல்

கார்டு இருந்தா போதும் கவலை வேண்டாம் : வீடு தேடி வந்து வசூல் செய்யும் மின்சார வாரியம்…

Share this:

உங்களிடம் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு இருந்தால் இனி நீங்கள் உங்களது மின்கட்டணத்தை உங்கள் வீட்டு வாசலிலேயே செலுத்தி விடலாம். தமிழக அரசு விரைவில் இத்திட்டத்தை அமல்படுத்த இருக்கிறது. மின் கட்டணம் செலுத்த கால்கடுக்க வரிசையில் நின்ற காலம் அந்தக் காலம் ஆகிவிட்டது. தற்போது மக்கள் இணையதளம் இ-சேவை மையங்கள் மற்றும் செல்போன் செயலி உள்ளிட்ட டிஜிட்டல் முறைகளில் மின் கட்டணத்தை செலுத்துவது அதிகரித்து வருகிறது.

மின் பயனீட்டாளர்களுக்கு மேலும் பலன் அளிக்கும் வகையில் தமிழக அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் மின் அளவீடு எடுக்க வரும் பணியாளரிடம் “பாயிண்ட் ஆப் சேல்” என்ற கருவி இருக்கும். பொதுமக்கள் கிரெடிட் அல்லது கார்டு டெபிட் கார்டு மூலம் தங்களது மின் கட்டணத்தை இதில் செலுத்தலாம். இந்தத் திட்டம் கணினி வசதி இல்லாதவர்கள், நவீன கைப்பேசி இல்லாதவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மின்சார கட்டணத்தை சிரமமின்றி செலுத்த ஏதுவாக இருக்கும் என மின்துறை அமைச்சர் தங்கமணி மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.

கொரோனா பொது முடக்கம் மத்திய மாநில அரசுகளையும் முடக்கிப் போட்டதால் இந்தத் திட்டம் செயல் வடிவம் பெறுவதும் தள்ளிப்போகிறது. மக்களுக்கு நலன் பயக்கும் இத்திட்டத்தை தமிழக மின்சார வாரியம் விரைவில் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.


Share this:

Related posts

பக்தர்களின்றி இன்று துவங்கும் வேளாங்கண்ணி திருவிழா..

MANIMARAN M

பட்டையை கிளப்பும் தங்கம் விலை… இன்றைக்கு எவ்வளவு… தெரிந்து கொள்வோம்..!!

NEWSKADAI

உடன் பிறப்புகளிடம் உஷார்; வேலை இல்லா பட்டதாரிகளுக்கு இன்று நல்ல நாள்…!!

THAVAMANI NATARAJAN

அரசு நூலகங்கள் செயல்படும்…. தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M

குட் நியூஸ் : சபரிமலை மகர விளக்கு பூஜைக்கு பக்தர்களுக்கு அனுமதி..!!

THAVAMANI NATARAJAN

நல்ல மனிதர்களின் நட்பினால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்… உங்க அதிஷ்டமான எண் இதுதான்..!!

THAVAMANI NATARAJAN