Newskadai.com
தமிழ்நாடு

’ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் குளறுபடி… போராட்டத்தில் குதித்த மக்கள்..!!!

Share this:

தமிழகத்தில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கடந்த 1ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் படி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் நாட்டில் எங்குவேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம், ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் போலியான ரேஷன் கார்டுகளை ஒழிக்கலாம் என்பதற்காக அமல்படுத்தப்பட்டது. ஆனால் இத்திட்டத்தில் சில சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள பயோமெட்ரிக் முறைப்படி கைரேகை பதிவு ஆதார் அட்டையுடன் உள்ள கைரேகையோடு ஒத்து போகாமல் ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுகிறது.

rationஅதுமட்டுமின்றி இணைய சேவை சரியாக கிடைக்காததால் ஒவ்வொரு நபருக்கும் கைரேகை பதிவுக்காக 5 முதல் 10 நிமிடங்கள் ஆவதால்  பொதுமக்கள் பெறும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இந்த நிலையில் சேலம் தாதகாப்பட்டி நெசவாளர் காலனியில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு நேற்று காலையில் பொருட்களை வாங்க மக்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளால் சுமார் ஒரு மணி நேரமாகியும் பொருட்களை வழங்க முடியவில்லை. இதனால் மக்கள் திடிரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இது போன்று பல்வேறு ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் முறைப்படி கைரேகை பதிவுக்கு கால தாமதம் ஆகிறது என பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.


Share this:

Related posts

ஆலங்குடியில் 24, 25,26 தேதிகளில் முழு ஊரடங்கு… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

AMARA

அடுத்தடுத்து அதிர்ச்சி… சிறந்த மருத்துவர் கொரோனா தொற்றால் பலி…

THAVAMANI NATARAJAN

மதுரையில இதெல்லாம் சாதாரணம்ப்பு… இது மூணாவதப்பு…

THAVAMANI NATARAJAN

கோவையை கலக்கிய டவுசர் கொள்ளையர்கள்… போலீசிடம் தானாக வந்து கொத்தாக சிக்கிய சம்பவம்…!!

NEWSKADAI

முதுகலை பட்டப் படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பம்.. அரசு அறிவிப்பு…

MANIMARAN M

போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு… பிரபல ரவுடி என்கவுன்டர்… பதட்டத்தில் தூத்துக்குடி…

MANIMARAN M