Newskadai.com
அரசியல்

முதல்வர் வேட்பாளர் இவர்தான்… அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி..

Share this:

கடந்த 28ஆம் தேதி ஐந்து மணி நேரம் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வரும் அக்டோபர் 7ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சேர்ந்து அறிவிப்பார்கள் என தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் என தனித்தனியாக சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ம.மூ.கோவிலூரில் பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் கூறியதாவது, தமிழகத்தில் நல்ல முறையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்கள் பிரச்சனைகளையும் தீர்த்து வருகிறோம். அதனால் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான். கட்சிக்குள் சின்னப் பிரச்சனைகள் இருக்கும், ஆனால் அடுத்த முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான். வரும் அக்டோபர் 7 ஆம் தேதி ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் முறைப்படி அறிவிப்பார்கள். முதல்வர் நடத்திய கூட்டத்தில் துணை முதல்வர் அவரது அலுவல் காரணமாக பங்கேற்காவில்லை, என்று கூறி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


Share this:

Related posts

ஆறே கேள்விகளில் மோடியை ஆட்டம் காண வைத்த ராகுல் காந்தி…!!

THAVAMANI NATARAJAN

“ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்”… தமிழிசை சவுந்தரராஜன் கண்ணீர் அறிக்கை…!

AMARA

எப்படியிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்… தேமுதிக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!

AMARA

இழி துரோக வரலாற்றில் இடம் பெறுவாய்… 800 பட விவகாரத்தில் விஜய் சேதுபதிக்கு ராமதாஸ் எச்சரிக்கை…!

NEWSKADAI

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்… மர்ம ஆசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…!

NEWSKADAI

பாஜகவுக்கு அடுத்த ஆப்பு… கூட்டணியில் இருந்து விலகியது மற்றொரு கட்சி…!!

MANIMARAN M