Newskadai.com
இந்தியா

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்…

Share this:

கொரோனா நோய்த்தொற்று பரவல் சூழலில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் இன்று தொடங்குகிறது. அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத் தொடரில் இரு அவைகளும் வெவ்வேறு நேரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. மாநிலங்களவை கூட்டத்தொடா் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. மக்களவை கூட்டத்தொடா் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது.

கொரோனா முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக எம்.பி.க்கள், அதிகாரிகள், நாடாளுமன்ற அலுவலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட 4,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே நாடாளுமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவா். எம்.பி.க்கள் அமா்வதற்காக சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தொடா் நடைபெறும்போது எம்.பி.க்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் 11 மசோதாக்களைத் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனா ராணுவத்தினரின் அத்துமீறல், பொருளாதார வீழ்ச்சிநிலை, நாட்டில் வேலையின்மை அதிகரிப்பு, தனியார்மயமாக்கபடும் விமான நிலையங்கள் போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.


Share this:

Related posts

ரூபாய் நோட்டில் கொரோனா வைரஸ்… வெளியானது அதிர்ச்சி தகவல்…!!

MANIMARAN M

கல்லூரி தேர்வுகளை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை… மத்திய அரசு அதிரடி

MANIMARAN M

கேரள முதல்வரையே மிரள வைத்த கோமதி… ‘சிங்கிள்’ஆளாக ஜெயித்த சிங்கப்பெண்…!!

MANIMARAN M

ஓடுதளத்தில் இரண்டாக உடைந்து விழுந்த விமானம்… கேரளாவில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு??

AMARA

“மனதுக்கு பிடித்த இடத்தை நோக்கி பறந்து கொண்டிருக்கிறோம்”… விமான விபத்தில் பலியான பயணியின் உருக்கமான பதிவு…!!

MANIMARAN M

மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய அரசு… கொரோனாவை கண்டுகொள்ளாமல் தொடங்கியது JEE தேர்வு…!!

THAVAMANI NATARAJAN