Newskadai.com
தமிழ்நாடு

நாகை, கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை…!!! இன்று கரையை கடக்க போகும் புயல்…!!!

Share this:

மேற்கு மத்திய வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளதையடுத்து தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடக்கு அந்தமான் கடல் மற்றும் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Rain

இந்த புயல் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரப் கடற்கரை நர்சபூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. புயல் கரை கடக்கும் போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Rain

வங்க கடலில் உருவாகியுள்ள இந்த புயல் காரணமாக தமிழகத்தில் நாகப்பட்டினம், கடலூர், பாம்பன் உள்ளிட்ட துறைமுகத்திலும், புதுச்சேரி, காரைக்காலிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

மருத்துவ மாணவர்கள் கட்டாயம் 2 ஆண்டு அரசு பணி : உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

MANIMARAN M

கேரள தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்… கோவை நகைப்பட்டறை உரிமையாளரை வளைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்…!!

MANIMARAN M

நீட் தேர்வு கேள்வித்தாள் எப்படி இருந்தது?… மாணவர்கள் கூறிய பகீர் பதில் இதுதான்…!!

NEWSKADAI

அவதூறு வீடியோக்களை நீக்க அதிரடி உத்தரவு : மாரிதாஸுக்கு ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்…!!

NEWSKADAI

பணத்தால் குடும்பத்திற்குள் வளர்ந்த பகை… சாவில் முடிந்த “தாய் மாமன்” சண்டை…!

THAVAMANI NATARAJAN

புளியமரத்தில் கார் மோதி விபத்து… தேமுதிக பிரமுகர் சம்பவ இடத்திலேயே பலி…!

THAVAMANI NATARAJAN