Newskadai.com
தமிழ்நாடு

வசூல் வேட்டையில் போலி உணவு அதிகாரி… தூத்துக்குடியில் அரங்கேறிய சம்பவம்..!!!

Share this:

கொரோனா தொற்று பரவலை பயன்படுத்தி நூதகமான முறையில் மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள்.  ஒரு சில தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று இருப்பதாக கூறி குறிப்பிட்ட பணத்தை வசூல் செய்கிறார்கள், இதுபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என்று கூறி கடைக்காரர்களை ஏமாற்றி பணத்தை வசூல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எட்டயபுரம் பேருந்து நிலையம் மேலவாசல், நடுவிற்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள டீக்கடைகள், பேக்கரிகள், முட்டை கடைகள், மளிகைக் கடைகள், ஹோட்டல், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி ஆய்வு செய்துள்ளார். கொரோனா ஊரடங்கினால் உணவுப் பாதுகாப்பு சான்றிதழ் புதுப்பிக்காத கடைகளை மன்னித்து விட்டு விடுவதாகவும், தற்போதைக்கு பணம் கொடுக்கும்படியும் கேட்டு வாங்கியுள்ளார்.

இவ்வாறு பல கடைகளில் ரூ. 100  முதல் 2000 ரூபாய் வரையிலும் வசூலித்துள்ளார். எட்டயபுரம் மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களில் உள்ள கடைகளிலும் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் கேட்டுள்ளார். ஹோட்டல் உழியர்களிடம் உணவு சரியில்லை என 1 லட்சம் அபராதம் கட்டவேண்டும் என கூறியுள்ளார். கடை ஊழியர்களோ இன்று உரிமையாளர் இல்லை, நாளை அலுவலகத்தில் வந்து உரிமையாளரை பாருங்கள் எனக் கூறியுள்ளனர், இந்த நிலையில் வியாபாரிகளுக்கு சந்தேகம் அடைந்து தூத்துகுடி உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் பாரதி மாரியப்பன் தலைமையிலான குழுவினர் விசாரனை நடத்தி வந்தனர். விசாரணையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனேரியை சேர்ந்த 22 வயதான கார்த்திகேயன் என்பது தெரியவந்து. கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

வேலையில்லனா என்ன பாஸ்…!! பட்டதாரிகளுக்கு முன்னுதாரணமாக மாறிய அசத்தல் இளைஞர்கள்..!!

MANIMARAN M

15 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை… தலைமறைவான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வலைவீச்சு…!!

NEWSKADAI

வேகமெடுக்கும் கொரோனா… நாகை, கடலூரில் முதல்வர் இன்று ஆய்வு…!!

MANIMARAN M

சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 1182 பேருக்கு தொற்று உறுதி…!!

NEWSKADAI

இனி டிராபிக் போலீசைப் பார்த்து பயப்பட வேண்டாம்… போனைக் காட்டிட்டு போய்ட்டே இருங்க…!!

THAVAMANI NATARAJAN

கோலமிட்டு கோரிக்கை வைத்த கும்பகோணம் மக்கள்… தனி மாவட்டம் ஆகாமல் தணியாது வேகம்…!!

THAVAMANI NATARAJAN