Newskadai.com
அரசியல்

முதல்வர் வேட்பாளர் யார்..? 6 ஆம் தேதி அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் தலைமைக்கழகம் வர உத்தரவு…

Share this:

கடந்த 28ஆம் தேதி ஐந்து மணி நேரம் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வரும் அக்டோபர் 7ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சேர்ந்து அறிவிப்பார்கள் என தெரிவித்தார்.

இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மத்தியில் முதல்வர் வேட்பாளர் யார், கட்சிக்கு யார் தலைமையேற்பது போன்ற கருத்து மோதல்கள் இருப்பதாக பலவித சலசலப்புகள் எழுந்துள்ள நிலையில், அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் வரும் 6 ஆம் தேதி சென்னை தலைமைக் கழகத்திற்கு வர வேண்டும் என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

6ஆம் தேதி அனைத்து எம்.எல்.ஏக்களின் கூட்டத்தில் யார் முதல்வர் வேட்பாளர் என வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. பல நாட்களாக நீடிக்கப்பட்டு வரும் இந்த பிரச்சனைக்கு முடிவு தெரியும் என்று அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர். ஆகவே வரும் 7 ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Share this:

Related posts

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார்..

MANIMARAN M

சீமானையும், ஹரி நாடாரையும் சும்மா விடாதீங்க… தற்கொலை முயற்சிக்கு முன் விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI

நாட்டையே உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு வழக்கு : இன்று வெளியாகிறது தீர்ப்பு…!!!

MANIMARAN M

இப்பவே இப்படியா?… ரஜினி கட்டளையை காற்றில் பறக்கவிட்ட ரசிகர்கள்… போஸ்டர் ஒட்டி அட்ராசிட்டி…!!

MANIMARAN M

பாஜகவில் அடியெடுத்து வைத்த உடனேயே இப்படியா?…. அண்ணாமலை மீது பாய்ந்தது வழக்கு…!!

NEWSKADAI

“திமுக தேர்தல் அறிக்கை வெறும் ஜீரோ”… ஸ்டாலினை சீண்டும் எல்.முருகன்…!

MANIMARAN M