Newskadai.com
தமிழ்நாடு

“நாட்டாமை” பட பாணியில் பஞ்சாயத்து… சேலத்தில் அரங்கேறிய அவலம்…!

Share this:

தமிழகத்தில் சொத்து பாகபிரிவினை பிரச்சனையால் அடிதடிகள், கொலை சம்பவங்கள் போன்றவை நடைபெறுவது வழக்கம். ஆனால் இதற்கு மாறாக சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த கருமந்துறை சின்னகல்வராயன்மலை வடக்கு பகுதியில் உள்ள சின்ன மாங்கோடு கிராமத்தில் சொத்து பிரச்சனைக்காக சண்டையிட்டுக் கொண்டவர்களுக்கு நாட்டாமை பட பாணியில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Salem

அதேபகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் அவருடைய உறவினரான  கோவிந்தன் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 28 ம் தேதி அந்த ஊரில் உள்ள ஊர்க்கவுண்டர் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி இவர்களது பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக பஞ்சாயத்து செய்துள்ளனர். இதன் முடிவில் லட்சுமணன் மற்றும் அவரது மனைவி சங்கீதா, அண்ணன் வெங்கடேஷ் அவரது மனைவி கம்சலா, தந்தை, தாய் மற்றும் 4 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

Salem
 

அதோடு மட்டும் விடாமல் அவர்கள் ஊருக்குள் வந்தால் கடைகளில் எந்த பொருட்களும் வழங்ககூடாது, தடத்தில் நடந்து செல்லக்கூடாது எனவும், அவர்கள் ஊருக்குள் வருவதை தடுக்க முள்வேலி போட்டு தடத்தை அடைத்துள்ளனர். யாருடைய ஆதரவும் இல்லாமல் இரு நாட்களாக சிரமப்பட்டு வந்த நிலையில் லட்சுமணன் குடும்பத்தினர் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் ராமனை சந்தித்து தங்களுக்கு நடந்த கொடுமைகளை குறித்த போட்டோ ஆதாரத்தை வழங்கி புகார் மனு அளித்தனர்.

இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து இருவருக்கும் இடையே  சமாதானம் செய்து வைத்தனர். கட்டபஞ்சாயத்து நடத்தி ஒரு குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடைய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

மக்கள் உயிர் மீது இவ்வளவு அலட்சியமா?… சேலம் கொரோனா பணியாளர்கள் மீது பாய்ந்தது நடவடிக்கை…!

THAVAMANI NATARAJAN

ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்கும் “Swiggy”… கொதித்தெழும் சீமான்..

MANIMARAN M

தமிழகம் முழுக்க தாண்டவமாடும் கொரோனா… இன்றைய நிலை இதுதான்…!!

NEWSKADAI

குடிபோதையில் கார் ஓட்டிய போக்குவரத்து ஆய்வாளர்… மடக்கி பிடித்த மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

அவதூறு வீடியோக்களை நீக்க அதிரடி உத்தரவு : மாரிதாஸுக்கு ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்…!!

NEWSKADAI

சேலத்தில் சத்துணவு பணியாளர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்… ஆட்சியர் உத்தரவுடன் விவரம் உள்ளே…!

THAVAMANI NATARAJAN