Newskadai.com
இந்தியா

பாபர் மசூதி வழக்கில் அனைவரும் விடுதலை… திட்டமிட்ட செயலா? சந்தேகத்தை கிளப்பிய கமல்…!

election fund mnm
Share this:

28 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2000 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதி எஸ்.கே.யாதவ் இன்று வாசித்தார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும் பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்பட்ட நிகழ்வு இல்லை, மசூதியை இடிக்கத் தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்கவில்லை, சமூக விரோதிகள் பாபர் மசூதியை இடித்த போது குற்றம்சாட்டவர்கள் அவர்களைத் தடுக்கவே முயற்சி செய்துள்ளனர் என்று தீர்ப்பில் கூறினார்.

இந்த தீர்ப்பிற்கு நாடு முழுவதிலும் வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவொன்றை ட்வீட் செய்துள்ளார். அதில், நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது என்று பதிவிட்டிருக்கிறார்.


Share this:

Related posts

“கருத்து சுதந்திரத்தை நசுக்கவே தேச துரோக வழக்கு பயன்படுகிறது”… மத்திய அரசை சாடிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி…!

MANIMARAN M

ஏடிஎம்மை உடைத்து லட்சக்கணக்கில் திருட்டு… கொள்ளையர்கள் கைவரிசை…!!

THAVAMANI NATARAJAN

தனியாருக்கு தாரை வார்க்கப்படும் ரயில்வே… சத்தமே இல்லாமல் வேகமெடுக்கும் பணிகள்…!!

MANIMARAN M

நிலக்கரிச் சுரங்க ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் குற்றவாளி..!!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

MANIMARAN M

பசுவுடன் பாலியல் வல்லுறவு… சிசிடிவியால் சிக்கிய கொடூர மனிதன்…!!

NEWSKADAI

ஒரே நாடு… ஒரே லைசன்ஸ்… ஒரே ஆர்.சி.புக்… டிஜிட்டல் இந்தியா…

MANIMARAN M