Newskadai.com
இந்தியா

அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்கலாம்..!! முதல்வர் அனுமதி…

Theatre Reopen
Share this:

கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை திறக்க அனுமதியளித்துள்ளார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டில்லியில் இதுவரை 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதல் 5 இடங்களுக்குள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக டில்லியில் கொரொனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து பல தளர்வுகளை கெஜ்ரிவால் அறிவித்து வருகிறார்.

மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் இதுவரை 95% பேர் குணமடைந்துள்ளனர். தற்போது டில்லியில் சுமார் 20 ஆயிரம் பேர் கொரொனா சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனடிப்படையில் மத்திய அரசு அறிவித்துள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வின்படி வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் அரசின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு திரையரங்குகளை திறக்கலாம் என டில்லி மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

50% பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாநிலத்தில் வாரசந்தைகளை இனி வழக்கம்போல் திறக்கலாம் எனவும், அக்டோபர் 31 வரை பள்ளிகள் திறக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

பிரம்மபுத்திரா நதிக்கு கீழே பலே திட்டம்… சீனாவுக்கு இந்தியாவின் அதிர்ச்சி வைத்தியம்…!!

NEWSKADAI

பூரி ஜெகநாதர் கோயிலுக்குள் நுழைந்த ‘கொரோனா’… 400 ஊழியருக்கு தொற்று உறுதியானதால் பீதி…!

NEWSKADAI

கொரோனா தொற்றுக்கு பலிகடா ஆக்கப்பட்ட தப்லீக் ஜமாஅத்… அரசுக்கு குட்டு வைத்த மும்பை உயர்நீதிமன்றம்…!!

MANIMARAN M

ஏடிஎம்மை உடைத்து லட்சக்கணக்கில் திருட்டு… கொள்ளையர்கள் கைவரிசை…!!

THAVAMANI NATARAJAN

கொரோனாவை அடுத்து பேய் மழையிடம் சிக்கிய மும்பை… கரைபுரளும் வெள்ளத்தால் கவலையில் மக்கள்…!!

MANIMARAN M

துணை முதல்வர் பதவிவேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர்…!!

THAVAMANI NATARAJAN