Newskadai.com
தமிழ்நாடு

ஆசிரியரிடம் லட்சக்கணக்கில் ஆட்டையை போட்ட ஆன்லைன் வர்த்தகம்..!!

Online Fraud
Share this:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் ஆன்லைன் மோசடி ஈரோட்டையும் விட்டு வைக்கவில்லை, ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் வசித்து வரும் அன்பரசன் 34 இவர் வேலூரில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக  பணியாற்றி வருகிறார், கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்லூரிகள் செயல்படாமல் உள்ள நிலையில்  ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க நினைத்துள்ளார்,.

Online Fraud

இந்நிலையில் தனது வங்கி கணக்கினை ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான போலி இனையதளத்தில் பதிவு செய்துள்ளார், அதன் பின் இவரது வங்கி கணக்கில் சரசரவென நான்கு நாட்களில் ரூபாய் 80 லட்சம் உயர்ந்துள்ளது, மகிழ்ச்சியடைந்த அன்பரசன் பணத்தினை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார், ஆனால் எடுக்க முடியவில்லை பின்பு அந்த இனையதளத்தில் கொடுக்கப்பட்ட தொலையேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய போது எதிர் முனையில் பேசியவர் அந்த பணத்தை எடுக்க வேண்டுமானால் நாங்கள் தரும் வங்கி கணக்கிற்கு நான்கு லட்சம் கட்ட வேண்டும் அதன் பின்னரே உங்கள் கணக்கில் உள்ள பணத்தினை எடுக்க முடியும் என தெரிவித்தனர்.

Online Fraudஅதனை நம்பிய அன்பரசன் பணத்தாசையால் அவர்கள் கொடுத்த இணையதள முகவரி வாயிலாக “ஸ்பே டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் புதுடெல்லி“ கணக்கு எண் XXXX XXXX XXXX என்ற வங்கி கணக்கில் நான்கு லட்ச ரூபாய் செலுத்தினார், அதன் பின் அன்பரசனின் கணக்கில் இருந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி முழு பணமும் போனது அதன் பின்னர் தான் நான்கு லட்சத்தை இழந்தது தெரிந்தது. இதன் பின் இது தொடர்பாக தன் பணத்தினை மீட்டுத்தர வேண்டி ஈரோடு மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்ததின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.


Share this:

Related posts

சாப்பாடு, தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் கொரோனா நோயாளிகள்… கிருஷ்ணகிரி ஆட்சியருக்கு வைத்த கோரிக்கை வீடியோ…!!

AMARA

“மாணவர்களின் மனித கடவுளே”… ஆல் பாஸ் போட்ட முதல்வரை போஸ்டர் ஒட்டி திக்குமுக்காட வைக்கும் மாணவர்கள்…!

MANIMARAN M

பெரம்பலூரும், தென்காசியும் விரைவில் கொரோனா இல்லாத மாவட்டமாகும்… மற்ற மாவட்டங்களின் நிலை..?!

NEWSKADAI

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு… எவற்றுக்கெல்லாம் தளர்வுகள் அறிவிப்பு….!

NEWSKADAI

3 வருஷமா ஒரே பாணியில் திருட்டு… போலீசில் சிக்காமல் “டிமிக்கி” கொடுத்த கார் டிரைவர் சிக்கியது எப்படி?

THAVAMANI NATARAJAN

அறந்தாங்கியில் ஈட்டியால் குத்தி பெயிண்டர் கொடூரக் கொலை…!!!

MANIMARAN M