Newskadai.com
தமிழ்நாடு

15 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை… தலைமறைவான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வலைவீச்சு…!!

Nanjil
Share this:

ஊரடங்கில் மக்கள் வறுமை மற்றும் பிழைப்பிற்கு வழியில்லாமல் இருக்கையில் சிலர் தரக்குறைவாக நடந்து கொள்வது மிகவும் வருந்ததக்க செய்தியாக உள்ளது. லாக்டவுன் நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாகவே சிறுமிகள் மீது நடத்தப்படும் பாலியல் வெறியாட்டங்கள் தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.

Nanjil

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை உருவாக்கியது.அந்த சம்பவத்தால் ஏற்பட்ட தாக்கம் அடங்குவதற்குள் அதே புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே 7 வயது சிறுமி உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

மேலும் படிக்க: http://கொடைக்கானலில் கும்மாளம்… நடிகர்கள் சூரி, விமல் மீது வழக்குப்பதிவு…!

இப்படி அடுக்கடுக்கான சம்பவங்களால் அனைவரும் அதிருப்தியில் இருக்கும் சமயத்தில், 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த சில நாட்களாக காணவில்லை என பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க: http://நெகட்டிவா? பாசிட்டிவா?… தனியார் மருத்துவமனையின் பித்தலாட்டத்தால் சிக்கித் தவிக்கும் குடும்பம்…!

விசாரணையில் அந்த பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த பெண்ணை காவலர்கள் மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் அப்பெண்னிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன. அப்போது நாஞ்சில் முருகேசன் என்கிற முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மற்றும் சிலர் தனக்கு 2 வருடங்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும், இதனை யாரிடமும் கூறாமல் தான் மிகவும் சிரமப்பட்டு வந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.


Share this:

Related posts

மன்னார்குடின்னாலே பிரச்சனையா?… அரசு அதிகாரிகளின் மெகா ஊழலை அம்பலப்படுத்திய மக்கள்…!!

MANIMARAN M

கட்சிபாகுபாடியின்றி அடித்து தூக்கிய மு.க.ஸ்டாலின்… மட்டற்ற மகிழ்ச்சியில் பிரேமலதா, டிடிவி…!

NEWSKADAI

சேலத்தில் கொரோனாவுக்கு சூப்பர் ட்ரீட்மெண்ட்… திறந்தாச்சு சித்த மருத்துவ மையம்…!!

THAVAMANI NATARAJAN

ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடியார்… விநாயக சதூர்த்தி ஊர்வலங்களுக்கு தடை…

MANIMARAN M

செஞ்சுரி அடிக்க போகுது மேட்டூர் அணை… நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

THAVAMANI NATARAJAN

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தல்…!!

THAVAMANI NATARAJAN