Newskadai.com
அரசியல்

முழு அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. இறுதிப்பயணம்… அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை…!!

Share this:

கடந்த 50 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பி. சுப்பிரமணியம் இன்று காலமானார். கொரோனா ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டு வந்த அவர் இன்று ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய மறைவிற்கு நாடெங்கிலும் உள்ள திரை உலகினரும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

SPB
SPB

நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை சென்னையை ஒட்டிய செங்குன்றத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவராக அரை நூற்றாண்டு காலம் புகழோடு விளங்கி, பத்மஸ்ரீ-பத்மபூஷண் விருதுகள் பெற்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதிப்பயணம் உலகெங்கிலும் வாழும் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Share this:

Related posts

#BREAKING மத்திய அமைச்சர் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய மோடி, அமித் ஷா…!

AMARA

ஒரே ஒரு போஸ்டர்… விஜய்யின் டோட்டல் இமேஜை குளோஸ் செய்த ரசிகர்கள்…!!

AMARA

உங்க ஆட்சிக்கு முடிவுக்கு வந்தால் தான் விவசாயிகளுக்கு விடிவு… எரிமலையாய் கொந்தளித்த ஸ்டாலின்…!

AMARA

“இன்னோவா அல்ல.. ஏரோப்ளேனே வாங்கிக் கொடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது”… எல். முருகனை எள்ளி நகையாடிய நாஞ்சில் சம்பத்…!!

AMARA

தமிழகத்தை வஞ்சிக்கும் ரிசர்வ் வங்கியின் நியாயமற்ற கடன் கொள்கைக்கு முதல்வர் எதிர்ப்பு… பிரதமருக்கு கடிதம்…!!

MANIMARAN M

“சீமானை சும்மா விடமாட்டேன்”… தெருக்கோடியில் உட்கார்ந்து சபதம் போட்ட விஜயலட்சுமி…!!

AMARA