Newskadai.com
சினிமா

படப்பிடிப்பில் படுகாயம்… பிரபல இளம் நடிகர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…!

Share this:

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் விடப்பட்ட நிலையில் திரை பட்டாளங்கள் சில மாத இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பில் களம் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் மாரி 2 படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். தற்போது அவர் ‘காலா’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்த நிலையில் இப்படத்திற்கான காட்சிகள் கடந்த சில நாட்களாக எர்ணாகுளம் அருகே உள்ள பிறவம் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது.

Tovino Thomasஇரு நாட்களுக்கு முன்பு சண்டைக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று டொவினோ தாமசின் வயிற்றில் வில்லன் மிதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் பலத்த காயம் எற்பட்டுள்ளது. அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார். இதனைதொடர்ந்து உடனடியாக அவரை கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Tovino Thomas

சிகிச்சையில் அவரது வயிற்றுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டொவினோவை உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் நலம் பெற வேண்டும் என திரைத்துறையினர் மற்றும் அவரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Share this:

Related posts

விஷால் படத்திற்கு ஆப்பு… ஓடிடி ரிலீசுக்கு தடை போட்ட உயர் நீதிமன்றம்…!!

THAVAMANI NATARAJAN

திரும்பி வருவாரா எஸ்.பி.பி?… கண்ணீர் மல்க பேட்டியளித்த இயக்குநர் பாரதிராஜா…!

NEWSKADAI

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் படங்களை திரையிட மாட்டோம்… திடீரென போர்க்கொடி தூக்கிய திரையரங்கு உரிமையாளர்கள்…!!

NEWSKADAI

பிக்பாஸ் சீசன் 4-யை தொகுத்து வழங்குவாரா கமல்?…. போட்டியாளர்கள் பட்டியலைப் பார்த்து வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்…!!

AMARA

“நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் உயிரை பறிக்கிறது”.. சூர்யா கடும் கண்டனம்…!!

AMARA

தளபதி விஜய் பட இயக்குநர் திடீர் மரணம்… சோகத்தில் கோலிவுட்

NEWSKADAI