Newskadai.com
தேர்டு ஐ விளையாட்டு

என்னதான் ஆச்சு சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு? தொடர் தோல்வி…!!

Share this:

“ஒவ்வொரு போட்டியையும் முடிந்தவரையில் வெல்லப் பார்க்க வேண்டும். சிஎஸ்கே அணியிடம் தீவிரமே இல்லை, நோக்கமே இல்லை. விரட்டலில் அவர்கள் இல்லவே இல்லை” நமது சென்னை அணி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீரின் விமர்சன வார்த்தைகள் இவை. இந்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் மும்பையை எதிர்கொண்ட நம் சென்னை அணி வெற்றி கணக்குடன் ஆட்டத்தை ஆரம்பித்தது. நடப்புச் சாம்பியனை களத்தில் வீழ்த்தியதால் சென்னை அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது.

சென்னை அணியை பலவீனமான அணி என்று கருத்து சொல்லி வந்த கிரிக்கெட் வல்லுநர்கள் வாயை இந்த முதல் வெற்றி மூலம் அடைத்தது சிஎஸ்கே. இரண்டாவது ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொண்ட சென்னை அணி போராடி தோற்றது. இதை எதிர்பார்த்துக் காத்திருந்த பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையான வார்த்தைகளால் தோனியையும் சென்னை அணியையும் வறுத்து எடுத்தனர்.

அவர்களின் எதிர்மறை பேச்சுகளுக்க டெல்லி அணியுடனான மூன்றாவது போட்டியில் ஆடும் ஆட்டத்தின் மூலம் சென்னை அணி பதில் கொடுக்கும் என்று தோனி ரசிகர்களும் சிஎஸ்கே வின் ரசிகர்களும் ஏன் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். வெற்றியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய தோல்வியை பரிசாக அளித்தது சென்னை அணி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்பொழுது மிக மோசமான நிலையில் இருப்பது இந்த மூன்றாவது போட்டி மூலம்வெட்ட வெளிச்சமாக தெரிய வந்துள்ளது. அணியில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள் தொடர் துவங்கும் முன்பே விலகினர். முக்கிய ஆல்-ரவுண்டர் டிவைன் பிராவோ காயம் காரணமாக பங்கேற்கவில்லை. முதல் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த அம்பதி ராயுடுவும் காயம் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் ஆடவில்லை.

முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியை கரை சேர்ப்பார் என நம்பிய நிலையில் ஜடேஜா பார்ம் அவுட் ஆனது போல் விளையாடி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. பவுலிங், பேட்டிங், பில்டிங் என எதிலும் அவர் இதுவரை தன்னை வெளிப்படுத்தவில்லை. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ஏதோ கடமைக்கு டீ ஆற்றுவது போல் வந்து செல்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும்போது “சிஎஸ்கே அணியிடம் தீவிரமே இல்லை, நோக்கமே இல்லை. விரட்டலில் அவர்கள் இல்லவே இல்லை” என்ற வார்த்தைகள் 100% உண்மை என்றே தோன்றுகிறது. சென்னை அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டு வீறுகொண்டு எழுந்தால் மட்டுமே இனி வெற்றி சாத்தியம்.


Share this:

Related posts

“தல தல தான்” புகழ்ந்து தள்ளிய சைமன்….

MANIMARAN M

சிஎஸ்கே உடன் மீண்டும் இணைந்த நட்சத்திர வீரர்… விசில் போட்டு கொண்டாடும் சென்னை ரசிகர்கள்…

MANIMARAN M

அதிரிபுதிரி IPL ஆரம்பம்… சென்னையுடன் மோதும் மும்பை…

MANIMARAN M

“தோனி வேற லெவல் பிளேயர்” தோணியை புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்

MANIMARAN M

2020 IPL கொண்டாட்டம் : போட்டி அட்டவணை வெளியீடு…

MANIMARAN M

சர்வதேச கிரிக்கெட்டில் இவர் தான் நெம்பர் ஒன் கேப்டன்… தல தோனியை பின்னுக்குத் தள்ளிய இயன் மோர்கன்…!!

MANIMARAN M