Newskadai.com
தமிழ்நாடு

வைகை அணையை திறந்துவிட அதிரடி உத்தரவிட்ட முதல்வர்… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

Vaigai
Share this:

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் விவசாயிகள் பயனடையும் வகையில் முதல்வர் பழனிசாமி அவர்கள் வைகை அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Edappadi

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்;

தேனி மாவட்டம் கம்பளம் பள்ளதாக்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக பாசனப் பரப்பான 45,041 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைக்கள் வந்துள்ளன. இதனை தொடர்ந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனப் பரப்பான 45,041 ஏக்கர் நிலங்களுக்கு 45 நாட்களுக்கு முழுமையாக தினசரி 900 கன அடி வீதமும், 75 நாட்களுக்கு முறைவைத்தும், மொத்தம் 120 நாட்களுக்கு 6,739 மில்லி கன அடியாக தண்ணீரை வரும் 31 ம் தேதி முதல் வைகை அணையிலிருந்து திறந்து விட  ஆணையிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Vaigai

இதனால் மதுரை, திண்டுக்கல்,மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து ஐயாயிரத்து இரண்டு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் அவர் கூறியிருந்தார்.


Share this:

Related posts

திருமணமாகி 4 மாதமே ஆன புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… தாலி, மெட்டியை கழட்டி கணவனிடம் கொடுக்க வைத்த அதிகாரிகள்…!

THAVAMANI NATARAJAN

”ரூ.20 இருந்தால் மட்டும் போதும்”… தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் இதை வாங்கிக்கொள்ளலாம்…!

THAVAMANI NATARAJAN

சேலத்தில் ஏடிஎம்-ல் கொள்ளையர்கள் கைவரிசை… போலீஸ் வலைவீச்சு..!!

THAVAMANI NATARAJAN

“சதுரங்க வேட்டை” பட பாணியில் நடந்த மோசடி… ரூ.60 கோடி அம்பேல்…!!

MANIMARAN M

12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை…!

THAVAMANI NATARAJAN

TNPSC குரூப்-1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு… முதல் நிலை தேர்வு விவரங்கள் உள்ளே…!!

THAVAMANI NATARAJAN