Newskadai.com
விளையாட்டு

டெல்லி அணியின் பந்து வீச்சுக்கு பயந்து ஒடுங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்…

Share this:

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த சிஎஸ்கே கேப்டன் தோனி பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். பேட்டிங்கில் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்று டெல்லி அணி திட்டமிட்டு விளையாடியது தெரிந்தது.

வழக்கமாக அவசரப்பட்டு ஆட்டமிழக்கக்கூடிய பிரித்வி ஷா, ரிஷப்பந்த் இருவரும் பொறுப்பாக பேட்டிங் செய்தனர். சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், இடது,வலது கை பேட்ஸ்மேன் என்ற ஜோடியில் வீரர்களை பயிற்ச்சியாளர் பாண்டிங் களமிறக்கினார். 

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. ப்ரீத்தி ஷா 64 ரன்கள், தவான் 35 ரன்கள், ரிஷப் பந்த் 37 ரன்கள் எடுத்தனர். வெற்றி பெற 176 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கியது சிஎஸ்கே அணி.

ஓபனிங் பேட்ஸ்மேன்கள் முரளி விஜய் வாட்சன் இருவரையும் டெல்லி அணியின் பவுலர்கள் தங்களது பந்துவீச்சால் மிரட்டினார்கள். வழக்கம்போல சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக்கட்டினார். சென்னை அணியில் டூப் பிளசிஸ் மட்டும் 43 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆட்டம் முழுவதும் டெல்லி அணி பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. சென்னை அணியின் அனைத்து வீரர்களும் ரன் எடுக்க முடியாமல் திணறினர். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே சேர்த்து 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்தது.

டெல்லி அணி தன்னுடைய 2-வது ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் 2 தோல்விகள், ஒரு வெற்றியுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.


Share this:

Related posts

ரெய்னா குடும்பத்தில் அரங்கேறிய துயர சம்பவம்… IPL-லிருந்து விலகியது இதற்காக தானாம்…!

MANIMARAN M

#IPL : ஹைதராபாத்தின் ஆக்ரோஷத்தில் அடங்கிப்போன பஞ்சாப் அணி…!!

MANIMARAN M

ராஜஸ்தான் அணியின் பிளே ஆப் கனவை கேள்விக்குறியாக்கிய ஹைதராபாத் அணி…

MANIMARAN M

என்னதான் ஆச்சு சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு? தொடர் தோல்வி…!!

MANIMARAN M

ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றிக்கு இதுதான் காரணமாம்… ஐபிஎல் 10வது ஆட்டத்தில் நடந்த அதிரடி

NEWSKADAI

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி… IPL-லிருந்து விலகிய முக்கிய வீரர்…!!

MANIMARAN M